பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 மஹேஸ்வரி அவனுடன் காரில் புறப்பட்டாள். விமான கூடத்தில் விமானம் புறப்பட ஆயத்தமாக நின்றது. - மஹேஸ்வரியை விமானத்தின் உள்ளே அழைத்துச் சென் முன் சுந்தர்சிங். மஹேஸ்வரி சுற்றிலும் பார்வையைச் செலுத்தினுள்ே எங்கும் ராணுவ வீரர்கள் சூழ்ந்திருக்கக் கண்டாள். 'இங்கே உட்காருங்கள்,' என்று ஓர் ஆசனத்தைச் சுட் டினன் சுந்தர் சிங். அவன் உட்கார்ந்து கொண்ட அந்த ஆசனத்தின் தலைப் பில் சுந்தர்சிங் என்ற பெயர் இல்லை. அஹமத் அலி என் றிருந்தது. மஹேஸ்வரிக்கு வேர்த்தது. மறுபடியும் கூர்ந்து அக் கூட்டத்தைப் பார்த்தாள். அவ்வீரர்களின் முகங்களில் சூதும் சூழ்ச்சியும் விளையாடக் கண்டாள். உங்கள் பெயர்உண்மைப் பெயர் என்ன?’ என்று உரத்த தொனியில் வின வினுள் அவள். 'ஏன், சுந்தர்சிங்தான்!” என்று நகைப்புடன் பதிலி துத்துவிட்டு, இந்தியாவின் வரைப்படத்தை ஒரு முறை ஆவ லுடன் பார்த்தபடியே ஒரு விடிை தாமதம் செய்யாமல், விமானத்தைக் கிளப்புவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து விசைகளை முடுக்கி விட்டான். இவன் என்னே ஏமாற்றி விட்டான். இவன் நம் எதிரி: பாவி! என்று ஒரு நொடியில் மஹேஸ்வரிக்குப் புரிந்து விட் டது. வீறு கொண்டாள்; அவளது ரத்தம் துடித்தது. தாய், நாட்டினைக் காக்க வேண்டுமென்ற கடமை யுணர்ச்சியோ அப்பொழுது அவளுக்கு உயிர்ப்பாகத் தோன்றியது.இப்படிப் பட்ட புல்லர்களின் நயவஞ்சகப் போக்குகளுக்கு உடனடி யாகச் சாவு மணி அடித்துவிட வேண்டுமென்று எழுச்சி பெற்ருள். மறுபடியும் சுற்றிச் சூழ நோக்கினுள். எதிரே