பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • மச்சான்’’ வேலன் திடுக்கிட்டெழுந்தான்.

புள்ளையைக் கெட்டியமாய்ப் பார்த்துக்கங்க. நான் ஒடிப்போய் ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்த்துக்கிட்டு வாரேன்” என்று சொல்லி மகளைப் புருஷன் மடியில் பிடிப் பாக வைத்தாள். அதற்குள் என்ன நினைப்போ? தகப்ப னிடம் தவழ்ந்த குழந்தைக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மீண்டும் விரைந்தாள் காவேரி. அவள் தாய்! ஊர்ச் சத்திரத்தில் ஏழைகளுக்குச் சாதம் வடித்துப் போடுவதாகச் செய்தி காவேரிக்கு எட்டியது. அவ்வளவு தான்; சோறு கிடைக்கப்பெற்ற பஞ்சைபோலக் கவளச் சோற்றுக்கு விழுந்தடித்துக்கொண்டு ஓடினுள். பொன் விளைந்த பூமியில் வறுமைத் தாண்டவத்தின் பிரதிநிதிகள் போன்று பந்தி பந்தியாக உட்கார்ந்திருந்த ஏழைபாழைகளுடன் அவளும் ஒருத்தியாகப் போய் அமர்ந்து கொண்டாள். பரிமாறுபவன் வரிசைக் கிரமமாகச் சோறு போட்டுக் கொண்டுவந்தான். அதைத் தொடர்ந்து பின்னல் குழம்பும் கறியும். அத்துடன் மேல் பார்வைக்கு ஒர் "மேஸ்திரி. 'இன்னிக்கு நரி முகத்திலேதான் முழிச்சிருக்கணும். சாப்பாடு நல்ல வேட்டை, மச்சானுக்கு இது தெரிஞ்சாத் தெகச்சுப் போயிடும்.? இது அவள் ஆசைக் கனவு. 'ஆளு புள்ளேதான் பாவம் கத்தித் தீர்க்கப்போவுது' என்று வேறு கவலை கொண்டாள்: காவேரியின் முறை வந்தது. சோறு, கறி, குழம்பு எல்லாம் வாங்கிக்கொண்ட பிறகும் அவள் போகவில்லை. பக்கத்திலிருந்தவர்கள் போய்விட்டார்கள். என்ன தோன் நிற்ருே, 'எசமான்' என்று அழைத்தாள். 'ஐயா, எம் புருஷனுக்குக் கண்ணுகடை தெரியாத சொரமுங்க. அவராலே நடக்க முடியலே. அவருக்கும்