பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ, தெரு நாய்! இழந்தை வீரிட்டு அழுதது; அழுகை சப்தம் கேட்டு விழித்தெழுந்த காவேரி மகளுக்குப் பால் கொடுத்துவிட்டுத் திரும்பினுள். உச்சிப் பொழுதாகி யிருந்தது. தன் மச் சா'ன ஒருதரம் ஏறிட்டுப் பார்த்தாள். வேலன் சுரணே தவறிய துரக்கத்தில் கிடந்தான். நாலு நாளாக அடித்த காய்ச்சல் அன்றைக்குத்தான் ஒருமாதிரி தணிந்திருந்தது. 'மரம் வச்சவன் தண்ணி ஊத்தமாட்டான்ைனு: சும்மா குந்திக்கிட்டு இருந்தாச் சோறு எப்படிக் கிடைக்கும்? தாலு வீடு தேடிப்போளு எந்த மவராசியாச்சும் மனசு இளகிப் பிடிசோறு போடாமலா போயிடுவாக? ஆளு, மச்சானுக்கு உடம்பு காயலா இல்லாட்டி வழக்கம்போலப் பிச்சைக்குப் புறப்பட்டிருக்கலாமே இம்மா நேரத்துக்கு; வயத்துப் பாட்டுக்கும் திறமாக் கிடைச்சிருக்குமே-’ இந்த ரீதியில் அவள் மனத்து எண்ணங்கள் சங்கிலிக் கோர்வை பின்னின. அவள் பிச்சைக்காரி, வேலன் அவளுடைய கணவன். தம்பதிகளின் வாழ்க்கைச் சுவடு குழந்தை. இந்த மூன்று. நபர்களும் வறுமைப் பறையறிவிப்பின் வஞ்சனைக்குள்ளான தரித்திர நாராயணர்கள்; யாரோ சொல்லியிருக்கிருரே அது மாதிரி அவர்கள் தெய்வக் குழந்தைகள்' ஆம்; சிருஷ்டிச் சிக்கலுக்கு எடுத்துக்காட்டு. வேலன் கபோதி. வாழ்வின் ஒளி வளர்பிறையாகப் பரிணமிக்க வேண்டிய பருவம்; என்ருே ஒளி கிறுக்கிப் பாய்ந்த மின்னல் அவளது பார்வையைப் பறித்துச் சென்று விட்டது. அவன் துடித்துப் போனுன்; காவேரி நிலை குலைந்தாள்.