பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சட்டியைக் காலி செய்த பூரிப்பால் நாய் மெல்ல நகர்ந் தது. அவளுக்கு நாய் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந் தது. காவேரி கீழே கிடந்த 'சுக்கான் கல்’ ஒன்றை எடுத்துப் 'பாளத்த நாயே, கயிட்டப்பட்டுச் சம்பாதிச்ச சோத்துக்கு எமஞவா வந்தே’ என்று ஒலமிட்டுக் கல்லை வீசப் போனுள். 'காவேரி. எனக்குக் கண்ணு கிடைச்சிட்டதே தெரி யாதா?’ என்று கூவினன் வேலன். காவேரி, என்ன? கண்ணுப் பார்வை வந்திருச்சா?' என்ற அதிசயக் கேள்வியுடன் கணவன் சமீபம் ஓடினுள். அவள் கையிலிருந்த பெரிய கல் நழுவிற்று. ஆணுல்-! அங்கே அவளுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மச்சானின் கண்கள் முன்போலவே முடியிருந்தன. மின்வெட்டு அப கரித்துச் சென்ற பார்வை, ஒருசமயம் சற்றுமுன் வெடித்த மின்னலால் திரும்பிவிட்டதோ என்ற சபலம்தான் அவள் ஆசைக்குக் காரணம். கடைசியில்? - வேலன் சிரித்தான். குழந்தை வீல் என்று கத்தியது. காவேரி கண்ணிர் பெருக்கினுள். 'காவேரி, எம்மேலே ஒனக்கு ரொம்பக் கோவமாங் காட்டியும்? பாவம், அந்த நாய்மேலே எதுக்கு அம்பிட்டு எரிச்சல்? நீ கொண்டாந்த சோறு இப்ப அந்த நாய்க் குட்டிக்குக் கிடைக்கணுமின்னு இருக்கும்போல, அதே சொத்தை நம்ப செல்லக்கண்ணு தின்னிருந்தா, நீ இவ் வளவு கோவப்படுவியாக்கும்.” . . . . . . . . . சற்றும் சலனமற்றுப் பேசிக்கொண்டே போன கண வனது புது வேதாந்தமும், வக்கணையும் அவளுக்குப் புதி ராக்ப் பட்டன. வாழ்க்கையே ஒரு புதிர்தானே! அவள் மறுபடியும் விச்சைக்குப் புறப்பட்டாள்; இல்லையென்ருல் மச்சானுக்குச் சாப்பாட்டுக்கு வழி: