பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 'எலே காவேரிப் பொண்ணு' அவள் திரும்பினள். 'காவேரி, நம்ப பாக்கியந்தானே இன்னிக்கு நம்ப புள்ளே உசிரு தப்பிச்சுது. நீ போனதும் மகளைப் படுக்க வச்சிட்டு நானும் படுத்தேன். இது என்னடான்ன தவழ்ந்து அது போக்கிலே வீதி முக்கத்துக்குப் போயிருச்சாம். காத்து வேறே பிச்சு அடிச்சதில்லே அந்தச் சமயம் திடு. மின்னு வேகமாகக் காரை ஓட்டியாந்த ஐயாவுக்கு, நம்ப கண்ணு குறுக்கே கிடந்தது கண்ணிலே தட்டுபட்டிருக்கு: சடக்கின்னு காரை நிப்பாட்டிப் புள்ளேயைத் தூக்கிட்டா ராம். அப்பத்தான் மகளைத் தடவிப் பார்த்தேன். காணவே பதறிப்போய் வெறிப்பிடிச்சவன் கணக்காகத் தட்டுத்தடு மாறி நடந்தேன். உன் குழந்தையான்னு கேட்டு மகளைக் கொடுத்தாரு அந்த மவராசன். நான் கதறினதைக் கண்டு முதலாளி போலே...நானு என்னத்தைக் கண்டேன்... அவரு ரொம்ப இரக்கப்பட்டாரு. ஆன, பாவம் அவருக்கு ஒரு குஞ்சு குட்டி இல்லாதது ஒண்டிதான் பெருங்கவலை. கடைசியாக் கோயில் பட்டைச் சோறு, வடை ஒவ்வொண் னப் பேரு சொல்லித் தந்தாரு இந்தமட்டும் மக தப்பி னது நம்ப புண்ணியந்தானே? அந்தச் சந்தோசத்திலே எனக்குக் கண்ணு கிடச்சுட்டுதுன்னு சத்தம் போட்டேன். நம்ப கண்ணுப்பொண்ணக் காட்டிலுமா எனக்கு எங் கண்ணுப் பார்வை உசத்தி: இன்னிக்கு நமக்கு அளந்தபடி இம்பிட்டுத்தான். பாவம் அந்தத் தெரு நாய்...!" என்று வேலன் உணர்ச்சி வசப்பட்டவனுகக் கூறினன். முள் முனையில் ஊசலாடிய காவேரியின் தாய் மனம் அப்போதே நிம்மதி பெற்றது. தன் மகள அப்படியே வாரியெடுத்து உச்சி மோந்தாள். உடனே காவேரியின் நீர் மண்டிய விழிகள், சற்றுமுன் தன் கல்லுக்குப் பலியாகிவிட இருந்த அந்த நாய்க்குட்டியை இரக்கத்துடன் துழாவித். தேட ஆரம்பித்தன.