பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேடி வந்த தெய்வம் 'அக்கா என்று கூப்பிப்பிட்டுக் கொண்டு வந்தாள் கமலா. தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்த நான் மெல்ல ஏறிட்டுப் பார்த்தேன். என் கண்களிலிருந்த நீர்த் திரை மறையவில்லை. தொடர்ந்த இருமல் வந்து விட்டது. என் மெல்லிய உடலெல்லாம் தாளாத நோவு. நான் கமலாவுக்குச் சொந்த அக்காளல்ல; ஆனுலும் நாங்கள் இருவரும் பழகிய முறை அப்படிப்பட்ட அக்காதங்கை பாந்தவ்யத்தை எங்களிடையே வித்திட்டிருந்தது; இப்போதைக்குக் கமலாதான் எனக்கு உடன் பிறந்தாளா கவும், படுத்த படுக்கையாகக் கிடந்த கடந்த நாலு மாதமாக என்னுடன் கூடவே இருந்து பணிவிடை புரியும் உயிர்த் தோழியாகவும்-ஏன் பெற்றவளாகவும், உற்றவளாகவும்ஆக எல்லாமாகவும் நிறைந்திருக்கிருள்!.. இரவு மணி பன்னிரெண்டு. எனக்கு வேளைப் பிரகாரம் கொடுக்க வேண்டிய மருந்தைக் குலுக்கினுள்; எனக்குக் குமட்டியது. அவுன்ஸ்கிளாசில் விளக்கு வெளிச்சத்தில் கணக்கிட்டு அளவு மருந்தை ஊற்றி என்னிடம் நீட்டினள். மருந்தைத் தரையில் கொட்டி விட்டு கிளாசை மேஜை மீது ‘டங் கென்று ஆத்திரத்திரத்துடன் வைத்தேன். அவள் முகத்தில் என் மீது கொண்ட கோபத்தின் விளைவு. அவ ளுக்கு எதற்குமே உரிமையுண்டு. நான் என்ன செய்யட்டும்? என் நிலை . .இதற்கு விடிவு...! அக்கா. என்றுமில்லாமல் ஏன் இப்படி மருந்தைக் கொட்டிவிட்டாய்? மருந்து குடித்து அது உடலில் சார்ந்தால் தானே உன் நோய் ஜல்தியில் குணமாகும்; உடம்பிலும் ரத் தம் ஊறும்.” - -