பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மருதன்குடி வட்டாரத்திற்குள்ளே அழகிப் போட்டி வைத்தால், முதற் பரிசு அஞ்சுகத்துக்குத்தான் கிடைக்கும். பட்டிக்காட்டு மண்ணில் அத்தி பூத்தமாதிரி தென்படும் சிவப்பு நிறம் அவளுடைய மேனியை அண்டி அடிபணிந்தது. கனவு காணும் கண்கள்; கண்டவர்களைக் கனவு காண வைக் கும் அவை: அவளுக்கு முறை மச்சான் முத்துலிங்கம் ஆண ழகன், நாவற்பழக் கறுப்பு என்ருலும் நல்ல அழகு. ஆமா, இம்மாந் தொலைவு முத்துலிங்கமும் அஞ்சுகமும் இழைஞ்சு இடிச்சுப் பேசிச் சிரிச்சுப் பழகுருங்களே. மெய் யாலும் இவுங்க ரெண்டு பேருக்குந்தான் கண்ணுலம் நடக்கப் போவுதாங்காட்டியும்?' என்ற முனு முனுப்பு ஊர்க்காட் டில் நிழலாடியது. ஆளுல் அவர்கள் இருவரும் எதையுமே பொருட்படுத்த வில்லை. இந்தாலே பாரு அத்தை மகளே! எங்க அப்பாவும் உங்க அப்பாரும் ஆதிநாளேயிலே ஊர்க்கட்சி, காளாஞ்சி விசயமா மனத்தாங்கலை வளர்த்துக்கிட்டு, அதை மறக்கா மல் வாழவச்சுக்கிட்டும் வரதாலே தான், ஊராருங்க இப் படிக் காதைக் கடுச்சுக்கிடுருங்க. நான் இப்ப பேசுற தாக் கல் தகவலை சேலை முந்தானேயிலே முடிஞ்சு வச்சுக்க. பொண்ணே!...நான் எப்படியோ நாடகமாடி, உங் கழுத் திலே முடிச்சுப் போட்டுப்புடுறேன். இந்த உரிமைக்கு உன் ளுேட அப்பாகிட்டேயும் உத்தாரம் வாங்கிக்க. நீ தாயில் லாப் பொண்ணு. உம் பேச்சுக்கு அட்டி ஏதும் சொல்லமாட் டாரு மாமன்!...நீ தெம்பு குலேயாம இரு அஞ்சுகம்!” கங்காணி தோட்டத்துக் கிணற்றடியிலும், குப்பாயி ஊருணியிலும், காத்தாயி அம்மன் திருச்சந்நிதானத்திலும் அஞ்சுகம் தன் ஆசை மச்சானின் உறுதிமொழிகளே உயிரு டன் விளையாட விட்டாள்; அந்தத் தெம்பு மிகுந்த தேறு தலில் அவளுடைய இனிய கனவுகள் விளையாடின, அவள் சிரித்தாள்! - - இடைப்பட்ட பொழுதிலே இருதரப்புத் தந்தைமார் களுக்கிடையில் தூது சென்றவர்கள் சூடு பட்டார்கள்.