பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 கள் சில தறி கெட்டுக் கிடந்தன. நெற்றிப் பொட்டு வெகு துல்லிதம். கதவு ஆடி அசைந்தது. திரும்பிளுள் அவள்: கையில் கற்றைக் காகிதங்கள்: சுவர்க் கடிகாரம் ஐந்து அடித்தது. அவள் தன் கடிகாரத்தைப் பார்த்தாள். அவ்வளவு பெரிய ஆபீஸ் கடிகாரம் இதற்குத்தான பொய் சொல்லப் போகிறது? அவரவர்கள் கடையைக் கட்டி, நடைய்ைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். மிஸ்டர் பஞ்சநதம் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசை யாமல், தப்பித்தோம் பிழைத்தோம் என்ற பாவனையில் பூட்ஸ் ஒலியைக்கூட அழுத்தியபடி மறைந்தார். அந்த ஆளே மறைத்த புண்ணியம், பாவம் அந்த ஒடிசல் சைக்கிளுக்கே போய்ச் சேரட்டும்! அவள் தயங்கிளுள்: நெஞ்சம் தத்தளித்திருக்க வேண்டும். எம்பி எம்பி இறங்கியது. மார்புப் புறத்தே வெளியில் தலை நீட்டிய மஞ்சள் தாலிக் கயிற்றை உட்புறம் இழுத்துச் செலுத்தினுள். ஊம்’ என்ற ஒலி - தன்னுள் தனக்குத் தானே எழுந்து அடங்கிய ஒலி-அவளுள் எழுந்த ஒரு முடி வினைப் பிரகடனப்படுத்திய போக்கில் ஒசைப்படுத்தியது; அவள் ஸ்டுலில் அமர்ந்தாள். கடமையின் வைராக்கியம் அவ. ளது அழகு விரல்களில்ே வைரம் பாய்ந்தது. மருதாணி நகங்கள் ஒயில் சேர்த்துச் சிரித்துக் கொண்டி ருந்தன. அவள்: சுந்தரி! 岑 3: *