பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 அத்ற்குள் ஓடிவந்த சிரிப்பொலி அவளைத் திடுக்குற வைத்து விட்டது. அவள் ஒயில் சேர்த்துத் தலையை உயர்த்தினுள். மேலாக் கைச் சீர் செய்தபடி பார்வையைச் சுழல விட்டாள். மெல்ல நடந்தாள். "மிஸ்டர் பஞ்சநதம்!... என்ன இப்ப நடந்திட்டுது: எதுக்கு இப்படிச் சிரிச்சீங்க இப்படி...எதிலும் ஒரு எட்டிகசி. வேனும், சும்மா தமிழ்ப் பண்பாடு, தெலுங்குப் பண் பாடுன்னு லெக்சர் அடிச்சு, ஆபீஸ் டயத்தை வீணுக்கிற திலே, பைசா புண்ணியமில்லே!... நீங்க யார்? நான் யார்?... மேலைநாடுகளிலே அவங்க அவங்க காரியம்தான் அவங் களுக்குக் குறி. ஆளுல் இந்த அருமைத் தமிழ்நாட்டிலே, ஏன் நம்ம பாரதத் திருநாட்டிலே முதல் கவலை பிறத்தியாரைப் பத்தித்தான் ! ...சே! மிஸ்டர், இது உங்களுக்குக் கடைசி "வார்னிங் 1 . . இனியொரு தடவை என் வழிக்கு நீங்களோ உங்க சிரிப்புக்களோ வந்துச்சோ; அப்புறம் விஷயம் எஸ். ஒ. மூலம் டைரக்டர் கிட்டே போய்ச் சேர்ந்திடும்!. . பி. கார் புல். .ஐ. சே!? குண்டுசி நழுவினல் சத்தம் கேட்கும், அப்படி இருந்தது ஹால். அவளுடைய கோல விழிகள் கோடிட்டுச் சுற்றி நிலைக்கு வந்தன. நெடுமூச்சைப் பிரித்தபடி பிரித்திருந்த தாள்களை இணைத்துக்கொண்டு அங்கிருந்து நகன்ற போது, மிஸ்டர் பஞ்சநதம் வழிந்து கொண்டிருந்த அசடுகளை கைச் சவுக்கத் தால்வழித்துவிட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு, அக் காட்சி யையே தன்னுடைய பெண்மையின் வெற்றிக் கடமையாகக் கொண்டு, நாசுக்காக ஸ்லிப்பர்களைப் பிரித்து நடந்தாள். நைலக்ஸ் புடவையின் கொத்துப் பூ குஞ்சங்கள் பூந் தென்ற லில் அலைந்தன. ஆபீஸரின் அறைக் கதவடியில் நின்முள் அவள். கதவுக் கண்ணுடியில் முகம் பார்த்தாள். சுருள் அலை பறந்த கேசங்