பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 கூடுவிட்டுக் கூடு ரெமிங்டன் இயந்திரம் ஒரே ஒட்டமாக ஓடிக்கொண் டிருந்தது. வெள்ளைக் கடுதாசியில் நீல நிற எழுத்துக்களைப் பதிக்க, நிமிஷங்கள் ஏழெட்டுப் போதும்போலும். தளிர் விரல்கள் இயங்குவதை நிறுத்திக் கொண்டன. உருளையை இயக்கி, வெள்ளைத் தாளே எடுத்து, அசலும் நக லும் சரியாக ஒத்து இருக்கிறதாவென்று மேலோட்டமாகப் பார்வையிட்டு, பிறகு 'கார்ப்பன் பேப்பரை அதன் யதாஸ் தானத்தில் சேர்த்தானதும், பெருமூச்சைக் கரையேற்றிய கடனுடன், டைப் செய்யப்பட்ட தாளுடன்-தாள்களுடன் அவள் எழுந்தாள். ஸ்டூலில் இருந்த குஷன் திண்டு நழுவி யது. அந்த ஹாலே ஒரு முறை ஜாடை பதித்துப் பார்த்த படி, கீழே குனிந்து திண்டை எடுத்தாள், இடது கையில் டைப் செய்யப்பட்ட தாள்கள். வலது கை திண்டை எடுத் தது. இதற்கிடையில் மார்பகச் சேலையின் முன்தானைப் பகுதி நழுவியது. பதட்டம் உயிர்த் துடிப்பு. அவள் சேலையைச் சமன் செய்து நிமிர்ந்தாள். திண்டு ஒரு பக்கமும் தாள்கள் இன்னொரு பக்கமுமாகச் சிதறின. திண்டை எடுத்து வைத்தாள். பேப்பர்த் தாள்களை எடுக்க முனைந்த போது, அவை காற்றில் பறந்தன. கடற். காற்று போதா தென்று. மின் விசிறி வேறு சுற்றிக் கொண்டிருந்தது. அவள் இட பேப்பர்த் தாள்களும் ஓடின. மூன்று நிமிஷப் போராட் டம் கழிந்த பிறகு, அவளது ஆத்திரப் பிடியில் சிக்கின. அந்: தத் தாள்கள். அப்புறம் தான் அவள் நெற்றி மேடு, கழுத் துப் பகுதி, மூக்கின் துணி, போன்ற இடங்களின் வேர்வை, யைத் துடைத்துக் கொள்ள வேண்டுமென்கிற நினைவு ஒடி கது.