பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 'அப்பா! அப்பா!' என்று கூக்குரல் பரப்பியவாறு வீட் விடினுள்ளே வெறிகொண்டு ஓடினன் நாதமுனி. ஐம்புலன் களின் ஆட்சியைக் கவிழ்த்து விட்டவன் போன்று அவன் அலறிஞன், சின்ன ஐயா! ஆட்டுக் கூடத்திலே இருந்திச் சிங்க இந்தக் கடுதாசித் துணுக்கு' என்று சொல்லியவாறு வேலைக்காரன் நீட்டிய நிகழ்ச்சியை நினைக்க அவனுக்கு உணர்வு ஏது? வீட்டுக் கூடம் வந்தது; ஆல்ை அங்கே அவ னது தந்தை சந்திரசேகரன் இருந்தால்தானே? அவருடைய பெரிய நிழற் படத்தை ஏறிட்டு நோக்கினன் நாதமுனி! நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்; கேவிக் கேவி அழு தான். பெரிய ஐயா'வைத் தேடிச் சென்றவர்கள் வெறுங்கை :யுடன் திரும்பினர்கள். • "பெரிய முதலாளியேதான் இப்ப இந்த ஆட்டிலே மறு பிறப்பெடுத்திருக்காங்க!” என்று அங்கிருந்தவர்கள் முன முணத்தார்கள். நாதமுனியின் கண்களில் ரத்த நரம்புகள் அறுபட்டு, குருதி வழிந்தது, 'எனக்குக் கெட்ட கோபம் வருது. எல் லாரும் வாயை மூடிக்கிட்டு இருங்க. என் அப்பாவை வாயிலே போட்டுக்கிட்டுப் பிறந்திருக்கிற என் பிள்ளையின் லட்சணத்தைப் பத்தி எனக்கு நல்ல்ாப் புரிஞ்சிருச்சுது! துர!...” என்று வீடு அதிரச் சத்தமிட்டான் நாதமுனி. அப்போது, 'டே தம்பி! உன் மகன் பிறந்த நேரத் தான், காசாங் குளத்திலே குதிச்சு மடியப் போன என்ளுேட உருவம் நம்ம தமிழ் வாத்தியார் கண்ணிலே தென்பட்டிருக் குது; ஒடியாந்து காப்பாத்திப்பிட்டாங்க. பச்சை மண்ணு அது. உலகத்தை நல்லா முழிச்சுப் பார்க்கிறதுக்குள்ளாற, நீ அதைப் பயமுறுத்திப்பிடாதேடா!...” என்ற குரல் கேட் • تيسمس நாதமுனி திரும்பின்ை. அலகிலா விளையாட்டில் திளைத்து விட்டிருந்த பிரபஞ். சம், இரவின் மோனத்தவத்தைக் கண்டும்,காணுதது போல், விஷமப் புன்னகையுடன் பணி இயற்றிக் கொண்டிருந்தது: