பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 'அன்புள்ள மைந்தன் சிரஞ்சீவி நாதமுனிக்கு, ஆசீர் வாதம்.” 'நிறை வயிற்றுடன் இருந்த பசுவின் மேல் நீ காரை மோதிய சேதியைக் கேட்டதும், என் மனசு அடைந்த துன் பம் கொஞ்சமில்லை! முன்பு, உன் தாயார் உன்னை வயிற்றில் சுமந்து நிறை கர்ப்பிணியாயிருக்கையில், இதே மாதிரியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது என்னுடைய வாழ்க்கையிலும்! இதே போன்று, நிறை வயிற்றுடன் இருந்த பசு ஒன்றின் மீது நான் ஒட்டிவந்த கார்மோதி, அந்தப் பசு அவ்விடத்திலேயே இறந்து விட்டது. உயிருக்கு உயிர் பலிவாங்கிவிடலாகாதே என்று நான் பயந்து கொண்டிருந்தேன். என் பயம் வீண் போகவில்லை. நான் செய்த பாவத்துக்கு நான் தண்டனையை அனுபவித்து விட்டேன். நீ பிறந்தவுடன், உன் தாய் கண் களை மூடிவிட்டாள். அப்படி ஒரு தீவினை வாழ்க்கையில் சம்பவித்துவிடலா காது!.. ...பாவம், அந்தப் பசு, உன் கார் மோதிய தொல்லை பொறுக்காமல் இந்நேரம் இறந்துபட்டிருக்கும். மன மறிந்தோ, மனம் உணராமலோ எந்தத் தவறு நிகழ்ந்தா லும், அதற்குத்தக்க பரிகாரம் உடனடியாகச் செய்துதான் தீரவேண்டும்; அதற்கான ஈடும் அவ்வப்போதே செலுத்தி யாக வேண்டும். இதுவே தான் வாழ்வின் உயிர்த் தத்து வம்! ...நீ செய்த குற்றத்திற்கு இதோ நான் பிராயச் சித்தம் செய்து விடுகிறேன். இனி, உன் மனைவிக்கும் சுகப்பிரசவம் ஆகிவிடும். நாடியம்மாள் உன்னைக் கைவிடமாட்டாள்! நீ உன் மனைவி மக்களுடன் பல்லாண்டு காலம் வாழ்வாய்! "எனக்காக நீ வருந்தாதே!...என்னை நீ நித்தமும் தரி சித்துக் கொண்டிருப்பாய்1. உனக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும். இப்போது புரிகிறதல்லவா? படைத்தவனின் திரு விளையாடலுக்கு நாம் என்ன ஈடு கட்டிப் பேசமுடியும்? இப்படிக்கு, 'சந்திரசேகரன்.”