பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 17 புனர் வாழ்வு எடுத்தாள் மங்களம்! நாதமுனி தன் தந் தையைக் காணுமல் தவியாய்த் தவித்தான். காரை எடுத் துக் கொண்டு தேட எண்ணி, காரைத் தொட்டான். அது சுட்டது! அவனது மனச்சாட்சிதான் அவ்வாறு சுட்டுப் பொசுக்கியிருக்குமோ? நிறைவயிற்றுடன் வந்து விழுந்த பசு வின் காட்சி தெரிந்தது. 'வாயில்லாச் சீவனைச் சாகடிச்ச நீ மட்டும் சிரிச்சுக்கிட் டிருக்க முடியுமா?...அதுதான், தெய்வம் உன் பெண்டாட்டி யையும் பிள்ளையையும் கூண்டோடு கைலாசம் சேர்த் திருச்சு?...' நாதமுனியின் உயிர் நடுங்கியது. அவனுக்கு எண்ணவே தெம்பில்லை; கடந்த காலமும், எதிர்காலமும் விதியின் சிரிப் புக்குப் பிணை நின்றனவா? ஏழை ஒருவன் ஒடி வந்தான். 'சின்ன எசமான் 1, ... எந் தப் பாவி மகனே என்னுேட பசுமாட்டு மேலே காரை மோதிப்பிட்டானுங்க, அது நெறை கர்ப்பமாயிருந்திச்சு. எனக்கு உசிரே துடிச்சிருச்சுங்க. மருந்து, மாயம் எதுவும் பலிக்கலே. கடைசியிலே ஆத்தாளே வேண்டிக்கிட்டு, கால் நடை ஆசுபத்திரி டாக்டர் ஐயாவைச் கூட்டியாந்து காட்டி னேனுங்க. கிடாரிக்கன்று போட்டிருக்குதுங்க; தாய்ப் பக வும் பிழைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும். அது இந்த மண் னிலே தங்கலிங்க!. ...' என்று செருகினன் அவன். 'மூக்கப்பா!...இந்தா நூறு ரூபாய் இருக்குது; அந்தக் கன்றுக்குட்டியை நல்லபடியாகக் காப்பாத்து! பாவம்!” என்று ஆறுதல் சொன்னன் நாதமுனி.அந்த நூறு ரூபாய்த் தாள்.அவனுடைய மனத்துக்கு ஆறுதல் புகல வழியின்றித் "திருட்டு விழி விழித்தது. வந்தவன் மறைந்தான். நாதமுனியின் கையிலிருந்த அக்கடிதம் நடுங்கிக் கொண் டிருந்தது. - 8