பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சைப்பதி நாடி 'பெண் பார்த்து வந்த சம்பவம் ஓடியது; ஒடிச் சென்ற இன்ப வாழ்வின் ஆனந்த பைரவிக் காட்சி கள் நெஞ்சில் ஆலாபனம் செய்து கொண்டிருந்தன. ஆண் குழந்தையானல் நாடிமுத்து பெண்ணுளுல் நாடியம்மை, என்றுதான் பேர் வைக்க வேணும்!’ என்று தன்னைக் கொண் டவள் தெரிவித்த ஆசையையும் அவன் அப்போது எண்ணத் தவறவில்லை. ஒரு விநாடி அவன் மலைத்து நின்முன். அந்தச் சாப ஒலி பூதாகாரமாக ஒலியெழுப்பிற்று: 'வாயில்லாச் சீவன் நிறைவயிருேடு இருந்திச்சே?...அதைச் சாகடிச்ச நீ மட்டும் சிரிச்சுக்கிட்டு இருக்க முடியுமா?...அதான் தெய்வம் உன் னேட பெண்டாட்டியையும், பிள்ளையையும் கூண்டோடு கைலாசம் சேர்த்துப்பிடுச்சு!...” நாதமுனி மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண் டான்: 'ஐயையோ!...இனிமே நான் என்ன செய்யப் போறேன்?' என்ற அவல ஒலம் தேயு முன்னம், ஒரு கை வந்து அவன் இடது தோளேத் தொட்டது. சுய உணர்வு கூடிவந்தது. வழிந்த வெள்ளத்துக்கு வகை சொல்லத் தெரி: யாதவளுக, அவன் அலங்க மலங்க விழித்து விழித்துப் பார்க்க லாளுன்! - 'நாதமுனி!...உன் பெண்சாதிக்கு ஆண் குழந்தை பிறந் திருக்குது!...மங்களமும் பெற்றுப் பிழைச்சிடுச்சு, தம்பி!... உங்க அப்பா புது டாக்டரைத் தேடிப் போயிருக்காங்களோ, என்னமோ தெரியலே! போய்ப் பார்த்து நல்ல சேதியைக் சொல்லிட்டு வாரேன்!...என்ன அப்படி விழிச்சுப் பார்க்கிறே தம்பி?...' என்ருர் வந்தவர். நாதமுனியின் விழிகளிலே கண்ணிர் முன்னைக் காட்டி: லும் இப்போது அதிகமாக ஊற்றெடுத்தது. முதற் குழவி யின் முதற் குரல் முதல் தடவையென அவன் இதயத்தில் எதிரொலித்தது! 冰 ※ ※ 米