பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 பயமுறுத்தியது.அவன்-நாதமுனி குலே நடுக்கம் எய்தினன். நாடியாத்தா, தாயே! என் பெண்சாதி மங்களத்தைக் காப் பாற்றித்தா!. . தாயையும் சேயையும் நல்லபடி யாக்கிக் கொடு தெய்வமே!. . தலைச்சன் பிரசவம்! என்னைச்சோதிச் சுப்பிடாதே, அம்பிகையே!” ஆறு போவதே போக்கு: அதொப்பத்தான் விதியின் போக்கும்! டாக்டர் இருவர் மாறிமாறி வந்தார்கள். லேடி டாக் உரை அழைத்துவரத் தஞ்சாவூருக்கு ஆள் அனுப்பப்பட் டிருந்தது. நாதமுனி வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்து கொண்டேயிருந்தான். மனப்புயல் வாசலில் விளையாடத் தொடங்கியது. நாதமுனி குத்துக் கல்லென நின்ருன். வாசல் வெளியில் அவனுடைய தந்தை சந்திரசேகரன் நின்று கொண்டிருந்தார். 'தம்பி, நீ போய்ச் சாப்பிடுப்பா !” என்ருர் பெரியவர். நாதமுனியின் விழிகள் கலங்கின. அப்போதுத்வாசலைக் கடந்து சென்ற ஏழை ஒருவன் தன் பாட்டிலே கத்தினன்: 'எந்தப் பாவி எம் பசுமேலே காரை மோதிஞனே தெரியலையே!...நெறைவயித் தோட பசு துடிக் குதே. அந்தப் பாவம் சும்மாவா விடப்போவுது?...அந்தப் பாவியோட பெண்சாதி பிள்ளை விளங்குமா?...வாயில்லா ஜீவன்!. . யாரு பேரைச் சொல்லத் தெரியும் அதுக்கு!...” உறங்கிக் கிடந்த உள் மனம் விழிப்புக் கண்டது. நாத முனி நடந்த கதையினைப் பெரியவரிடம் சொன்னன். சந்திரசேகரன், எனக்கு என்னமோ பயமாயிருக்குதே, நாதமுனி!...” என்ருர். நாதமுனி பச்சைக் குழந்தை மாதிரி கதறிக் கதறி அழுது கொண்டிருந்தான். மங்களம்.!...மங்களம்: என்று புலம்பினன்; தெய்வமே!...தெய்வமே!’ என்று விம்மினன். பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு, மங்களத்தைத் தஞ்