பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 நாற்பது மைல் வேகம் குறைக்கப்பட்டது. கண்மண் தெரியாமல் காரைச் செலுத்திப் பறந்து வந்த நாதமுனி, பெரிய கடை வீதி முனையிலிருந்து சின்னக் கடைத் தெரு வுக்குக் காரைத் திருப்பிய போது, அவனுக்கு உயிர் போய் உயிர் வந்தது. குறுக்கே பாய்ந்து மடங்கிய கிழவர் ஒரு வரின் உயிரும் நமனுலகம் சென்று மீண்டது. ஆசுவாசப் பெருமூச்சுடன், "பிரேக் போட்ட காரை மறுபடியும் செலுத்தத் தொடங்கின்ை அவன். தஞ்சாவூர்-பட்டுக் கோட்டை கடைசி பஸ் வழி நெடுகப் பறந்தது. "நாடி முத்து நகர் வளைவு நாதமுனியின் இதயத்தில் பதட்டத்தைப் பாய்ச்சிற்று. வடக்குக் கோடியில் ஒளி உமிழ்ந்துக் கொண்டிருந்த நாடியம்மனின் கோபுர தீபங்கள் அவனது சிந்தையில் ஒளிகாட்ட முயன்றன. நெஞ்சில் *தாய் நின்ருள். எழுந்த பிரார்த்தனையினுாடே, மங்களத் தின் சிரித்த முகம் நிழலாடியது. அவனுக்குக் கண்ணிர் வந் தது. மட்டுப்பட்ட காரின் வேகம் அதிகரித்தது, திருவிழாப் பந்தல்களிலே ஜனங்கள் நடமாட்டமும் அதிகரித்தது. கவ னம் பதித்தபடி, காரைத் திருப்பினன் நாதமுனி, மங் களம்.!... மங்களம்! என்ற பெயர் :உச்சரிப்பில் அவன் தன் னேயே மறந்து விட்டான் போலும்! காற்பாதங்கள், வேகத்தை நிர்ணயிருக்கும் மிதி'களிலே அழுத்தின. "ஸ்டீயரிங் துடித்தது. சரக்1 என்ற பயங்கரச் சத்தம் புறப்பட்ட போதுத்ான் அவன் தன் நினைவு எய்தின்ை. ரத்தத் துளிகளைத்தான் அவளுல் முதல் முதலாகத் தரிசிக்க முடிந்தது. நிறை கர்ப்பத்திலிருந்த பசு ஒன்று ரஸ்தாவில் சாய்ந்து கிடந்தது.

தம்பி!... ஒடியா!- சீக்கிரமா ஓடிவாயேன்!-”

அந்தப் பங்களா அவனை விழுங்கி ஏப்பம் விட்டு விடு வதைப் போன்று அப்படி ஆடியது; அவன் அந்தப் பங்களா வின் ஆட்டத்தில் அலைக்கழிந்து அல்லாடித் தள்ளாடிக் கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் பிறந்த அச் சம் அவளது உயிரை உட்கொண்டு விடுவதைப் போன்று