பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

மக்சீம் கார்க்கி


கதவின் கைப்பிடியில் கை வைத்துத் திறக்கப்போகும் சமயம் அவள் மீண்டும் திரும்பினாள்.

“நான் உங்களை முத்தமிடட்டுமா?”

தாய் ஒன்றுமே பேசாமல் அவளை ஆர்வத்தோடு அணைத்து. அன்பு ததும்ப முத்தம் கொடுத்தாள்.

“ரொம்ப நன்றி” என்று கூறிவிட்டு அந்தப் பெண் தலையை அசைத்து விடை பெற்றவாறே வெளியே சென்றாள்.

தாய் அறைக்குள் திரும்பி வந்தவுடன், ஜன்னல் வழியாக கவலையோடு வெளியே எட்டிப் பார்த்தான். இருளில் குளிர்ந்த பனித்துளிகள்தான் பெய்துகொண்டிருந்தன.

“உங்களுக்கு புரோசரவ் தம்பதிகளை ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டான் இகோர்.

அவன் தன் கால்களை அகலப் பரப்பியவாறு, தேநீரை ஓசையெழும்ப உறிஞ்சிக் குடித்தான். அவனது முகம் சிவந்து திருப்தி நிறைந்து வியர்வை பூத்துப்போய் இருந்தது.

“ஆமாம் நினைவு இருக்கிறது” என்று ஏதோ நினைவாய்க் கூறிக்கொண்டு மேஜையருகே வந்தாள் அவள். அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து இகோரைச் சோகம் ததும்பப் பார்த்தாள்.

“ச்சுச்சூ! பாவம் அந்த சாஷா! அவள் எப்படி நகருக்குப் போய்ச் சேரப் போகிறாள்?”

“அவள் மிகவும் களைத்துப்போவாள்” என்று தாய் கூறியதை ஆமோதித்துப் பேசினான் இகோர்; “சிறை வாழ்க்கை அவள் உடல் பலத்தை உருக்குலைத்துவிட்டது. அவள் எவ்வளவு பலசாலியாயிருந்தாள்? செல்லமாய் வளர்க்கப்பட்ட பெண்..... அவள் நுரையீரல் ஏற்கெனவே கெட்டுப் போயிருப்பது போலத்தான் தோன்றுகிறது.....”

“யார் அவள்?” என்று மெதுவாகக் கேட்டாள் தாய்.

அவள் ஒரு கிராமாந்திரக் கனவானின் மகள். அவள் சொல்வதைப் பார்த்தால் அவள் தந்தை ஓர் அயோக்கியனாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ள விரும்பினார்களே, தெரியுமா, அம்மா?”

“அவளும், பாவெலும்தான். ஆனால் நீங்கள் தான் பார்க்கிறீர்களே, அது ஒன்றும் நடக்கிற வழியாய்க் காணோம். அவன் வெளியே