பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xiii

1935 ஆம் ஆண்டு ரோமெய்ன் ரோலண்டும் அவர் மனைவி மரியா பாவ்லோவ்னாவும் சோவியத் நாடு வந்து, சிலகாலம் கார்க்கியுடன் தங்கினார்கள். கார்க்கியின் படைப்புகள் மீண்டும் மீண்டும் அச்சாயின. 1936இல் கார்க்கி நோய்வாய்பட்டார். குடும்பத்தினர் கட்சியினர் முழு அக்கறைகாட்டியும் ஜூன் 18 அன்று காலை 11 மணிக்கு உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளி உயிர் நீத்தார்.

(மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மக்சீம் கார்க்கி நூல் தொகுப்பு எண் 10 இல் கண்ட விவரங்களில் சில தொகுத்துத் தரப்பட்டுள்ளன)