பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

xii

புரட்சிகர உணர்வுகளைப் பெரிதும் மதித்தார். அதேபோது அந்த அறிவாளி வர்க்கம் தொழிலாளர் - விவசாயிகள் எழுச்சியையும் புரட்சி வேகத்தையும் கண்டு அதிர்ந்தது.இக்காலக்கட்டத்தில் கார்க்கி எடுத்த சில தவறான நிலைப்பாடுகளை லெனின் திருத்தினார். கார்க்கியை லெனின் அதிகமாக மதித்தார், நேசித்தார். ஆனால், அதேபோது அவருடைய பிழைகளைத் திருத்தத் தயங்கியதுஇல்லை. கார்க்கி உடல் நலமிழந்தபோது லெனின் சிகிச்சைக்காக பின்லாந்துக்கும் ஜெர்மனிக்கும் செல்ல ஏற்பாடுகள் செய்தார். 1923 இல் “என் பல்கலைக்கழகங்கள்", “காவலாளி", “முதல் காதல்” வெளிவந்தன.1924இல் லெனின் மறைந்தார். லெனின் வாழ்க்கை பணி பற்றிய நினைவுக் குறிப்புகளை கார்க்கி உணர்வு பொங்க எழுதினார். அவர் சிலகாலம் இத்தாலியில் வசிக்க வேண்டிஇருந்தது. அப்போது வி. ஐ. லெனின் என்னும் அவருடைய நூல் வெளிவந்தது, 1925-27 இல் “அசாதாரணம் பற்றிய கதை”, ”ஆர்ட்டமனாவ்” “செர்ஜீ ஏசனின்” “கிளிம்சம்கின் வாழ்க்கை ” ஆகிய நூல்கள் வெளிவந்தன.

1928 மார்ச் 28 கார்க்கி அறுபது ஆண்டு நிறைவு, உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பாராட்டுக் கடிதங்கள் குவிந்தன.இத்தாலியிலிருந்து சோவியத் நாடு திரும்பி வந்து சேர்ந்தார்.முதலில் லெனின் நினைவாலயம் சென்று மரியாதை செலுத்தினார். இலக்கியப்பணியில் ஆழ்ந்தார். செய்தித்தாள்களிலும், இலக்கிய இதழ்களிலும் கட்டுரைகள் எழுதிக் குவித்தார். 1930 நவம்பர் 15இல் “பிராவ்தா”வில் அவர் எழுதிய “பகைவன் பணியவில்லை என்றால், அவன் அழிக்கப்பட வேண்டும்” என்னும் கட்டுரை பிற்காலத்திலேபாசிசத்தை எதிர்த்து நடைபெற்ற இரண்டாவது உலகப்போர்க் காலத்தில் சோவியத் மக்களைத் தட்டி எழுப்பத் துணை செய்தது. 1933-ல் வெளிவந்த ”சோஷலிச எதார்த்தவாதம்” என்னும் கட்டுரை, புதிய இலக்கியச்சிந்தனை உத்திக்கு அடிக்கல் நாட்டிற்று. 1934 இல் சோவியத்கம்யூனிஸ்ட் கட்சியின் பதினேழாவது காங்கிரசில் சிறப்புப்பிரதிநிதியாகப் பங்கு பெற்றார். ஆகஸ்டு 17 அன்றுஅனைத்து சோவியத் எழுத்தாளர்கள் மாநாட்டுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ”சோவியத் இலக்கியம்” என்னும் தலைப்பில் வழிகாட்டி உரையாற்றினார்.