பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

மக்சீம் கார்க்கி


முனைந்தபோது, தனக்குத்தானே, யாரோ ஒரு இனந் தெரியாத நபருக்குச் சொல்வது போலப் பேசிக்கொண்டாள்:

“வருவதை ஏற்றுக்கொள்!”

இந்த எண்ணம் அவளது இதய வேதனையைச் சமாதானப்படுத்தியது; அவளது இதயத்துக்குள்ளே தந்தி நாதம்போல் ஒலி எழுப்பியது.

ஆனால் அவளது மனத்தின் அதல பாதாளத்திலே, மங்கிய, எனினும் இடை நீங்காத நம்பிக்கையொன்றை அவள் வளர்த்து வந்தாள். எந்தச் சக்தியும் தன்னிடமிருந்து சகலவற்றையும் பறித்துச் சென்றுவிட முடியாது; நிச்சயம் ஏதாவது மிஞ்சவே செய்யும்மூமூஎன்பதே அந்த நம்பிக்கை.


24

ஒரு நாள் அதிகாலையில், பாவெலும் அந்திரேயும் வேலைக்காகப் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் மரியாகோர்சுனவா ஜன்னல் கதவைத் தட்டியவாறு சத்தமிட்டாள்:

“அவர்கள் இஸாயைக் கொன்றுவிட்டார்கள்! வா, போய்ப் பார்க்கலாம்....”

தாய் திடுக்கிட்டாள். அவளது மனத்தில் கொலைகாரனின் பெயர் மின்னிப் பளிச்சிட்டு மறைந்தது.

“யார் கொலை செய்தது?” என்று கேட்டுக்கொண்டே ஒரு போர்வையை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டாள் தாய்.

“கொன்றவன் அவன் பக்கத்திலே உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. கொன்று தள்ளிவிட்டு ஓடியே போய்விட்டான்!”

அவர்கள் இருவரும் தெருவழியே போய்க்கொண்டிருக்கும்போது மரியா மீண்டும் தொடர்ந்து பேசினாள்.

“இனிமேல், அவர்கள் மூலை முடுக்கெல்லாம் தேடி அலசிப் பார்த்து, கொன்றவனைக் கண்டுபிடிக்க முனைவார்கள். உன்னுடைய ஆட்கள் நேற்றிரவு வீட்டுக்குள்ளே இருந்தது நல்ல காலத்துக்குத்தான். அதற்கு நானே சாட்சி. நான் இரவு நடுநிசிக்குப் பிறகு வீட்டுக்கு வந்தேன். அப்போது உன் வீட்டு ஜன்னலை எட்டிப் பார்த்தேன். நீங்கள் அனைவரும் மேஜையைச் சுற்றி, உட்கார்ந்திருந்தீர்கள்....”

“நீ என்ன சொல்கிறாய், மரியா? அவர்களை எப்படிச் சந்தேகிக்க முடியும்?” என்று பயத்தால் வெலவெலத்துப்போய்க் கேட்டாள் தாய்.

“பின்னே? யார்தான் சொன்றிருப்பார்கள்? எல்லாம் உன் சகாக்களோடு” என்று தீர்மானமாகச் சொன்னாள் மரியா: “அவன்