தாழ்வுணர்ச்சி- உயர்வுந்தல்
7
நனவிலே அவை வருவதில்லை. அதனாலேயே நனவிலி மனம் என்று அதற்குப் பெயர் வந்தது. மறைந்திருப்பதால் மறைமனம் என்கிறோம். இந்த நனவிலி மனம் தனிப் பகுதி யென்று நினைக்கக்கூடாது. மனத்தின் தன்மையை ஆராயும்போது அதன் முக்கியமான மூன்றுவகை நிலைகளைக் கொண்டு அதை நனவு மனம், இடை மனம், நனவிலி மனம் என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். சாதாரணமாக வாழ்க்கையில் தொழிற்படுவது நனவுமனம்.நாம் பல விஷயங்களைப் பற்றிச் சிந்திக்கிறோம். சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து அதன்படி நடக்கிறோம். இவையெல்லாம் நனவு மனம் என்ற பகுதியிலேயே நடைபெறுவதாகக் கூறலாம். சில சமயங்களிலே சில விஷயங்கள் சட்டென்று நமது ஞாபகத்திற்கு வருவதில்லை. யாராவது ஒருவருடைய பெயர் உடனே நினைவுக்கு வராமற் போவதுண்டு. 'கொஞ்சம் சிந்தித்தால் சற்று நேரத்தில் அது நினைவுக்கு வந்துவிடுகிறது. அது நனவு மனத்தைவிட்டுச் சற்று ஆழ்ந்து இடை மனத்திலிருந்ததால் நினைவுக்கு வரச் சிறிது தாமதமாயிற்று' என்று சொல்லுகிறோம். ஆனால் நனவிலி மனப் பகுதியில் உள்ள விஷயங்கள் இவ்வளவு எளிதில் நனவு மனத்திற்கு வந்துவிடமாட்டா. அவைகளை வெளிக்கொணர்வது கடினம். அவை அப்படி உள்ளே அழுந்திக் கிடந்தாலும் அவைதான் மனிதனைத் தமது விருப்பப்படி யெல்லாம் ஆட்டி வைக்கின்றனவாம். அவற்றினுடைய வலிமை மிகப் பெரிதாம்.
மனத்தைப் பற்றி இங்கு விரிவாக எழுதுவதற்கு இடமில்லை. தாழ்வு மனக் கோட்டத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஓரளவு மனத்தின் பல நிலைகளையும்