8
தாழ்வு மனப்பான்மை
நினைவூட்ட வேண்டுமென்றே இங்குக் குறிப்பாகச் சில விஷயங்களைக் கூறுகிறேன்.★
மனத்தின் அடிப்பகுதியாகிய, அதாவது மறைந்து நிற்கும் பகுதியாகிய, நனவிலி மனத்தைப் பற்றி விரிவாக ஆராய்ந்து முதன் முதலாகப் பல கருத்துக்களை வெளியிட்டவர் சிக்மண்ட் பிராய்டு என்ற ஆஸ்திரியா தேசத்து அறிஞராவர். மனத்தைப் பாகுபாடு செய்து பார்க்கும் புதிய முறை யொன்றையும் அவர் வகுத்தார்.. அதனால் அவர் தோற்றுவித்த உளவியலுக்கு உளப்பகுப்பியல் அல்லது மனப்பகுப்பியல் என்றே பெயர் ஏற்பட்டிருக்கிறது.
சிக்மண்ட் பிராய்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் யுங் (C.G. Jung)என்பவரும், ஆட்லர் (Adler) என்பவருமாவர். யுங் என்பவர் பிராய்டின் மாணவர். ஆட்லரையும் பிராய்டின் மாணவர் என்று கூறுவதுண்டு. ஆனால் ஆட்லரே அதை ஒப்புக்கொள்வதில்லை. அவர் ஆரம்பத்தில் பிராய்டின் கருத்துக்களை ஆதரித்தார் என்பது மட்டும் உண்மைதான். அவரோடு சேர்ந்து சுமார் பன்னிரண்டு வருஷங்கள் உழைத்திருக்கிறார்.
யுங், ஆட்லர் ஆகிய இருவரும் முதலில் பிராய்டின் மனப் பகுப்பியலை ஏற்றுக்கொண்டு அவரைப் பின்பற்றி ஆராய்ச்சிகள் செய்தார்கள். ஆனால் பின்னால் அவர்கள் இருவரும் பிராய்டின் கருத்துக்களிலிருந்து மாறுபட்டுப் புதிய கருத்துக்களை வெளியிடலானார்கள்.
யுங்கின் கருத்துக்களை இங்கு நாம் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால் அவர்தான்
★மனத்தைப் பற்றி விரிவாக மனமெனும் மாயக்குரங்கு என்ற நூலில் எழுதியுள்ளேன். அந்த விஷயங்களையே இங்குத் திருப்பிக் கூறுவது அவசியமில்லை.