உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

தாழ்வு மனப்பான்மை

கருத்து. அடிமனத்தை அறிந்துகொள்வதற்கு இம்முறை முக்கியமானதோர் வழியைக் காட்டுகிறது.

மேலே கூறியவாறு கனவுப் பாகுபாட்டுமுறை, தடையிலாத் தொடர் முறை ஆகிய இவை இரண்டிலுமே பிராய்டு முக்கிய கவனம் செலுத்தினார். ஆனால் இவற்றோடு நோயாளியின் நடத்தையையும் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்று ஆட்லர் கூறுகிறார். சிறு வயதிலிருந்து அவன் நடந்துவந்த விதமும், இப்பொழுது அவன் நடந்து கொள்ளும் விதமும் அவனுடைய மனக்கோளாறுகளைக் கண்டறியச் சிறப்பாக உதவுகின்றன என்பது அவர் கருத்து.

ஆட்லரின் கொள்கைப்படி ஒவ்வொரு மனிதனும் அவனுக்கே தனிப்பட அமைந்த ஒரு 'வாழ்க்கை நடை'யின்படி வாழ்கிறான். பிறரைக் காட்டிலும் ஏதாவது ஒரு வகையில் உயர்வடைய வேண்டும் என்ற நோக்கமே இந்த வாழ்க்கை நடையின் முக்கியமான அம்சமாக இருக்கிறது. அவன் விரும்பும் உயர்வு உண்மையானதாக இருக்கலாம், அல்லது வெறுங் கற்பனையானதாகவுமிருக்கலாம். அவனுடைய நடத்தை யெல்லாம் இந்த உயர்வு நோக்கத்தையடைவதையே குறியாகக் கொண்டு அமைந்திருக்கும்.

இவ்வாறு ஒவ்வொருவனும் தனது தகுதியை நிலை நாட்டித் தாழ்வு நிலையை விலக்கவும் உயர்வு நிலையை அடையவும் முயல்கிறான்.

தனது தகுதியை நிலைநாட்ட வேண்டு மென்ற தன்மை மனித இயல்பிலே கூடவே பிறந்ததல்ல வென்றும், தன்னிடத்திலே ஏதோ ஒரு குறை இருப்பதாகத் தோன்றும் ஓர் ஆழ்ந்த உணர்ச்சியின் காரணமாகவே அது பிறக்கிறது என்றும் ஆட்லர் கூறுகிறார். குறை இருப்பதாகத்