இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தன்னந்தனியாகச் சென்று கொண்டிருக்கும் அந்தச் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஓர் இடையன் கண்டான். அவர்கள் மேல் இரக்கம்கொண்டு, அவன் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். கஞ்சியும் கூழும் ஊற்றி அவர்களை வளர்த்து வந்தான். அன்புள்ளங் கொண்ட அந்த இடையனுக்கு ஆடுமேய்க்கும் வேலையில் அவர்கள் ஒத்தாசையாக இருந்தார்கள்.
ஒரு மலைக்குன்றின் அடிவாரத்தில் அவர்கள் ஆடுமேய்க்கும் பச்சைப் புல்வெளி-