பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


19. உணர்தலே கண்டறிதல்

ஆணும் பெண்ணும் சந்திப்பது போல, அது அவ்வளவு எளிமையாயிருப்பின், அது ஏன் அவ்வளவு இக்கட்டாயுள்ளது? அப்படிப்பட்ட போராட்டம், அவ்வளவு ஆவல். தேடல், திட்ட மிடுதல், சொற்போர், வற்புறுத்தலும், கெஞ்சுவதும், அப்பேர்பட்ட திருகல் முறுகல் ஏதோ இடைபட்டு, எளிமையானதும் சிக்கலாக ஆகிறது

முடிவு என்பது தெரிந்து கொள்ளுதல், செய்வது என்பதன்று ஆசை, விருப்பம், நம்பிக்கை, ஏன் தனிமையும் கூட மறப்பது சிறந்தது, ஏனெனில் இவை மனத்தைக் குழப்புகின்றன.

20. அறியும் தன்மை

பொருண்மைகள் கடினமாகத் தோன்றும் போது எளிமையையும், அழியும் தன்மையையும் நினைவு கொள் அது போலவே பொறுமையும், காட்சியும் நிலவும் போது நிறைவான அமைதி உவப்பு விலக்கப்படுகிறது.

21. வெளிப்படையான வினா

நகர்வதைத் தடு, அதன் மாற்றத்தை ஆய்ந்திடு. வெறுமையிலிருந்து எடுத்து விடு முழுவதும் நிரப்பு.