பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44 變 தாவோவின் ஆண்பெண் அன்புறவு


தொலைவுகள் அதிகமிருந்தும், போவதற்கு ஏதுமில்லை உலகின் வேறு எவ்வளவோ இடங்கள் இருந்தும், விடை இங்கேதான். போய்ச் சேர வேண்டிய இலக்குகளே இல்லை நாம் எங்கிருக்கிறோமோ, அங்கு தான் பயணம் அடைகிறது

53. ஒருவரில் இருவர்

ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் வெல்வது என்பது எவ்வளவு மடமை!. ஒருவராலோ மற்றவராலோ வழி நடத்தப்படாதே ஆனால் இருவரும் சேர்ந்து வழி நடததப்படட்டும் முதல் நிலையான அழைப்பைப் பின்பற்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் பணிவாக இருந்து இருவரும் இருக்கட்டும்

54. மீண்டும் முழுமை

ஆணின் பாதியும், பெண்ணின் பாதியும் ஒருவரின் பாதி மற்றவரின் பாதியினால் முழுமை பெற வேண்டியது உண்மையிலேயே உகந்தது. பாதிகள் இணைக்கப்படுகின்றன. முழுமை இல்லாதவை முழுமையடைகின்றன. ஒவ்வொரு வரும் இருவரிலும் இழந்து முழுமை அடைகின்றனர்.

55. ஒவ்வொருவரும் உயர்ந்தவரே

ஆண், பெண் என்ற எதிரிடையானவற்றின்