பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

திருக்குறள் காமத்துப்பாலுக்குப் பரிமேலழகர் முதல் படிப்பறிவோ பட்டறிவோ அற்ற நெடுஞ்செவிர்கள் வரை உரை கண்டாயிற்று. காமத்துப் பாலின் ஒவ்வொரு குறளும் அவ் உரைகளால் ஆண் பெண் அன்பு வாழ்வின், காதலியக்கத்தின் உள்ளொளியைக் காண முடியாது. கண்டுரைக்கவும் முடியாது. காதல் குறளின் கருத்தாழ்ந்த அமைதியும் அன்பின் உணர்வும் உணர்ச்சியும் கடலின் பெரிது. வானினும் உயர்ந்தது, புடவியினும் படர்ந்தது. அதற்கு ஒரு விளக்கம் போல இத் தாவோ (இயற்கை நெறி) நூல் உள்ளது. திருக்குறள் காமத்துப் பாலை எந்த ஒருவரின் உரையும் இன்றிப் படியுங்கள். ஒரு முறைக்கு இரு முறை, மும்முறையும் கூட அடுத்து இந்த நூலைப் படியுங்கள். காமத்துப்பாலின் உள்ளுரை இந்த நூலினை உள்ளுரையாக - குறிப்புப் பொருளாக உள்ளது. இதனினும் சிறந்த உரை திருக்குறள் காமத்துப் பாலுக்கு இருக்க முடியாது என்று தெளிவீர்கள் - ‘மலரினும் மெல்லியது காமம்’ என்ற தொடரின் பொருளை அறிவீர்கள்.

த. சித்திரா