பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

உற்றறியும் ஐம்புல இன்பத்தோடு மனத்தின் மட்டற்ற மகிழ்வினைப் பாடலாக்கினர் ஆனால் இவற்றுக்கெல்லாம் மாறாக வடமொழிவாணர்கள் தம் வாழ்வின் எதிரொலியாகக் கழிகாமத்தையே தனிப்பாடல்களிலும் காவியங்களிலும் கழிப்பறை ஓவியங்கள் ஆக்கினர் அதன் எதிரொலி - சீவகசிந்தாமணி முதல் சிற்றிலக்கியங்கள் வரை நாணமற்ற நாய்களின் செயலாயின

பாரதியும் பாரதிதாசனும் மீண்டும் வள்ளுவரின் இன்பத்துப் பாலைப் பருகி பருகிக் காதற் கவிதைகளில் உயிரோவியங்களைத் தீட்டினர்

இந்தியக் கவிஞர்களில் தாகுர் திருக்குறள் காமத்துப் பாலை கற்காமலே காதலின்பத்தில் திளைத்துக் காதற் கவிதைகளில் மெய்யறிவின்பத்தேனைப் பொழிந்தார்

இக்காலத் தமிழ்க் கவிஞர்களில் உவமைக் கவிஞர் முதல் புதுமை நுனிக் கொம்பேறி நவகவிதைத் தான்தோன்றிகள் வரை கழிகாமத்திலும் இழி காமத்திலும் சேற்றைச் சந்தனம் என்று சாற்றுபவர்களே. இவர்களுக்கு மாறாய் சீன நாட்டில் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் மூவரால் 'தாவோ’ கொள்கை தோன்றிற்று அதாவது இயற்கைநெறிக் கொள்கை. சங்க காலப் பாடல்களில் காணும் கரு அரிமுதற் கொருள் அமைந்த ஒரு நூல் அண்மையில ஆங்கில அறிஞர் - இரே கிரிக்கு மூலம் அறிமுகமானது 'ஓசோ' எனும் இரசனிசிவின் எண்ணங்களுக்கு மூல ஊற்றான நூல் இது என்பது தெரிந்ததும், இதனைத் தமிழாக்கம் செய்யப் புலவர் த கோவேந்தன் அவர்களை வேண்டினேன். உடன் ஒப்புக் கொண்டளித்த மொழியாக்க நூல்தான் இது.