பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



96 變

தாவோவின் - ஆண்பெண் அன்புறவு


வையிலிருந்து விடுபட்டதால், வழி நடத்துதலோ, பின் பற்றுவதோ இல்லை

117. அச்சம் தருவதைக் கண்டறிதல்

மதிப்பச்சம் காண் அஞ்சற்க, வியப்பைக் காண் அச்சம் என்ற இறுக்கம் உடையக் கூடியது, கடினமாகி தடை செய்து சுமையாகிக் கட்டுப்படுத்துகிறது அச்சத்தினால் கடினத்தன்மை உருவாகிப் பிரிவும், முறிவும் உண்டாகின்றன

அச்சத்தில் நம்பிக்கையும், வெளிப்படை யாயிருத்தலும் இருக்க முடியாது. ஒன்றாகக் கொடுப்பதும் வருவதும் இராது. நம்பிக்கை என்ற மென்மைதான் வியப்பிற்கு வழி கோலும்

118. வன்மை மென்மை இரண்டும்

பள்ளத்தாக்கின் கற்கள் ஓடையை வழிநடத்தும் மலைக் குன்றுகள் மழை பொழியச் செய்கின்றன உருளும் கூழாங் கற்கள் நீரைப் பிரிக்கின்றன

முதலில் மென்மை கடினத்திற்கும், பின்னர் இறுதியாகக் கடித்தன்மை மென்மைக்கும் விட்டுக் கொடுப்பதேன்?

நடப்பதற்கெல்லாம் பெயர் ஒன்றிருந்தால், அதைப் பெரிய மாற்றம், மாபெரும் தாய் எனக் கூறலாம்