இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தீபாவளி வேடிக்கை
அந்தத் தீபாவளி வேடிக்கை ரொம்பவும் வேடிக்கையான கதைதான், போங்கள் !
அடடே, போய் விடாதீர்கள் !
நின்று கேளுங்கள்.
கதையைச் சொல்லட்டுமா?
சரி:
தீபாவளிப் பண்டிகை என்றால் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்? அவரவர்கள் தலைகால் தெரியாத குதூகலத்தில் திளைத்திருத்தார்கள். அதாவது, தலையையும் காலையும் தெரிந்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தார்கள்!
அந்த வட்டத்துப் பிள்ளைகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.