பக்கம்:திரட்டுப் பால்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மயில் 9. வடக்கிற் கிரிக்கப் புறத்தும்நின் தோகையின் வட்டம்இட்டுக் கடற்கப் புறத்தும் கதிர்க்கப் புறத்தும் - கனகசக்ரத் திடர்க்கப் புறத்தும் திசைக்கப் புறத்தும் திரிகுவையே.?? கொற்றவேள் மயிலாகிய அதனே யாரும் மேல் ஏறி ஒட்டாமலே தனியே விட்டு விட்டால் அது மேருமலையையும் தாண்டிச் சென்று கடல், கதிரோன், உலகப் புறத்தில் உள்ள சக்கரவாள கிரி ஆகிய எல்லாவற்றையும் தாண்டிவிடுமாம். முருகன் அது தாவி அடியிடும்படி ஒட்டுகிருன். அது கிரணம் வீசும்படி கலாபத்தை உடையது. பச்சை நிறம் கொண்ட அதன் மேல் ஏறிவரும் போது அவன் பச்சையிற் பதித்த மாணிக்கம் போலத் தோன்றுகிறன். கொற்ற மயூரம், மாமயில், வெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில், நிகராட் சமபட்ச பட்சி, கார்மயில், கலாபப்புரவி, கொற்ற வேள் மயில், செழுங்கலபி என்கிறர். - மூன்ருவது பாட்டு: . ...’ - சேலில் திகழ்வயல் செங்கோடை வெற்பன் .# செழுங்கலபி ஆலித் தனந்தன் பனமுடிதாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியும் காசினியைப் பாலிக்கும் மாயனும் சத்ரா யுதமும் பணிலமுமே.” மயிலுக்கும் பாம்புக்கும் பகை. முருகன் மயில் உற்சாகம் மிகுந்து விட்டால் ஆதிசேஷனுடைய முடிகளேயே தாக்குகிறதாம். அதல்ை ஆதிசேஷன் முடிமணிகள் உதிர் கின்றன. அதன்மேல் சயனித்திருக்கும் திருமாலே கீழே விழுந்து விடுகிருர்ாம். அவர் கையில் உள்ள சக்ராயுதமும் சங்கமும் மயிலின் காலில் கிடக்கின்றனவாம். தூவிக்குல மயிலாகிய அது தன் கலாபத்தை விரித்தால், கராசலங்கள் எட்டும் குலகிரி எட்டும் விட்டோடும்; எதற்கும் எட்டாத வெளி மட்டும் புதைய அந்தக் கலாபம் விரிக்குமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/17&oldid=894375" இலிருந்து மீள்விக்கப்பட்டது