பக்கம்:திரட்டுப் பால்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திரட்டுப்பால் வள்ளியம் பெருமாட்டியைப் பலபடியாகப் பாடிப் புகழ் கிருர். பெரும்பைம்புனத்தினிற் செவ்வேனல் காக்கின்ற பேதை, பொருபிடியும் களிறும் விளையாடும் புனச் சிறுமான் தரு பிடி, கடத்திற் குறத்தி, நெற்றப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீல வள்ளி, தெள்ளிய ஏனலில் கிள்ளே, கள்ளச் சிறுமி என்று அப்பிராட்டி திணைப்புனம் காத்ததைச் சொல்கிருர், தேனென்று பாகென்று உவமிக் கொணு மொழித் தெய்வ வள்ளி, கொல்வியைச் சேர்க்கின்ற சொல்லி (கொல்லி-ஒரு பண், கொவ்வைச் செவ்வாய் வல்லி, மொய்தார் அணிகுழல் வள்ளி, குறிஞ்சிக்கிழவர் சிறுமி, கோலக் குறத்தி, அம் குறச் சிறுமான், வேடிச்சி, விளங்கு வள்ளி, காட்டிற் குறத்தி, செம்மான் மகள் என்று பல இயல்புகளையும் சொல்கிருர். முருகன், வள்ளிக்கு. வாய்த்தவன்ே!’ என்று அழைக்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/20&oldid=894378" இலிருந்து மீள்விக்கப்பட்டது