பக்கம்:திரட்டுப் பால்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.திருவிளையாடல்களும் வீரச்செயல்களும் முருகப் பெருமானுடைய திருவியாட ல்களையும் வீரச் செயல்களையும் பாராட்டிப் பல வகையில் சொல்கிருர். கிரவுஞ்சம் அணுவாகிக் குலேயவும் அரக்கர் அணிபட்டு அவர்கள் சேன நெளியவும் செய்தான். அதல்ை சூரன் பேரணி கெட்டது; தேவேந்திர லோகம் பிழைத்தது. சூரனைக் கொன்றதை வெவ்வேறு வகையில் எடுத்துக் காட்டுகிருர். சூரனை ஓரிமைப் போதினிற் கொன்றவன், அவுனர் மார்பில் பெருகிய இரத்தக் குளத்தில் குதித்துக் குளித்துக் களித்து வெற்றிக் களத்திற் கழுதாடச் செய்தவன். அவன் சூரனை அழித்ததனுல் இந்திரன் பிழைத்தான்; அதல்ை அவனுடைய மனைவியாகிய சசிதேவிமங்கல நாண் ரட்சிக்கப் பெற்றது. தன்னுடைய சுற்றத்துடன் வந்த சூரனுடைய மார்பும் கிரெளஞ்ச கிரியும் ஒரே சமயத்தில் ஊடுருவ வேலால் து களத்தான்; அவுணர் குலம் முழுவதும் பொடியாக்கினன்; கிரவுஞ்ச கிரி பொட்டுப் பொட்டாக உதிரச்செய்தான்; சூரகன அழித்து அமராவதி கொண்ட கொற்றவனைன். - - - - - - - - - ". . ." வேல்பட்டுச் சமுத்திரமும் குரனும் கிரவுஞ்ச மலையும் அழிந்தன; அசுரர் குலமுழுவதும் அஞ்சி நடுங்கி ஒலமிடச் செய்தான்; சமுத்திரத்தில் வேலை விட்டபொழுது சூரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/21&oldid=894379" இலிருந்து மீள்விக்கப்பட்டது