பக்கம்:திரட்டுப் பால்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திரட்டுப்பால் பெண்களின் இன்பத்தால் மயக்கம் உற்று உய்யும் வழி தெரியாமல் இருக்கிருர், குமான பதாம்புயத்தை வனங்காத் தலே எனக்கு எங்கே வந்து வாய்த்தது?’ என்று இரங்குகிறர். மோதர்பால் மயங்கும் மனே துக்கம் மாய்வதற்கு என்று நீ யருள்வாய்?’ என்று வினவுகிருர், புத்தியை வேறு இடங் களில் செல்லாமல் இழுத்து நின் பாதாம்புயத்தின் ஈடுபடச் செய்து முத்தியைப் பெற அறியவில்லையே! என்று புலம்பு கிருர். தம் நெஞ்சை, செல்வமெல்லாம் நீர்மேல் எழுத்துக்கு நேர் என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே என்கிருர், எம்பெருமானே, செத்துப் போவதற்கும் மறுபடியும் பிறப்ப தற்கும் அல்லாமல் தளர்ந்தவர்க்கு ஒன்றைக் கொடு பதற்கு எனக்கு அருள்புரியவில்லேயே! என்று ஏங்குகிருர், "நான் உன்னைச் சிந்திக்கவில்லே; சேவிக்கவில்லை; தண்டைச் சிற்றடியை வந்திக்கவில்லே; உன்னேச் சிறிதும் வாழ்த்த వశుడి; உன்னேச் சந்திக்கவில்லே; பொய்யை நித்தித்து, உண்மையைச் சாதிக்கவில்லே, புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போகவில்லை என்கிருர், நான் செய்த அன்பெல்லாம் மெய்யோ?” என்று ஐயுறுகிருச். பெறுவதற் கரிய மனிதப் பிறவியைப் பெற்றும் முருகன் சிற்றடியைக் குறுகிப் பணியும் பேறு பெறவில்ல்.பழனித்திருநாமம் படிக்க வில்லை; படிப்பவர் தாளேடாவது சிரமேற் கொள்ள அன்லே. முருகா என்று ஒத்வில்லே. பிறருக்கு இட்டு அதல்ை வறுமை யுறவில்லை. இப்படி இருக்கும் எனக்குத் தஞ்சம் ஏது?’ என்று உளேகிரு.ர். 'இந்தப் பிரமன் எனக்கு உன் தா8ளச் குடாத தலியையும், பார்க்காத கண்ணேயும், தொழாத கையையும், :பாடாத நாவையும் படைத்திருக்கிருனே: அவனுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? என்று கேட்கிருர், நெஞ்சே, மாதர் மயலில் சிக்காது, முருகன் பூங்கழல் நோக்கு’ என்று தம் நெஞ்சுக்குச் சொல்கிறர். பந்தாடும் மங்கையர்கள் கயல் போன்ற கண்பார்வையில் பட்டு உழலும் சிந்தாகுலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/26&oldid=894384" இலிருந்து மீள்விக்கப்பட்டது