பக்கம்:திரட்டுப் பால்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை இழித்துக் கொள்ளல் 19 கொண்டவராம். அதைத் தீர்த்தருள வேண்டுமாம். உன்னே வணங்கித் துதிக்க அறியாத மனிதருடன் இணங்கிக் குணம் கேட்ட துஷ்டன் நான்’ என்கிருர், சாது சங்கம் இல்லாமல் கேட்டுப் போனேன் என்பது கருத்து. பிரமனேக் குறை கூறுகிறர்; முருகனைக் கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்கிறர். முருகன் கண் கொள்ளாத பேரழகுடையவன் என்பதை இதனால் புலப் படுத்துகிறர். பெண்களின் கண்ணேயும், வஞ்சகமான சொற்களேயும், புன்சிரிப்பையும் விரும்புகிற நெஞ்சமே,வள்ளி மணவானனே விரும்பாமல் இருக்கிருயே!” என்று நெஞ்சத்தைக் குறைகூறுகிருர். நதியைப் போல நில்லாது ஒடும் பொய்யான வாழ்வில் அன்பு வைத்து, நரம்பால் பொதிந்த பொதியாகிய உடம்பைச் சுமந்து திண்டாடுமாறு விதி செய்து விட்டதே! இதை நொந்து நொந்து என் மனம் வேகின்றது என்று நைகிருர், துனே எதும் இல்லாமல், தாவிப் படரக் கொழு கொம்பு இல்லாத தனிக் கொடி போல் பாவித் தனி மனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதாம். பிறருக்கு இடுவதைச் சற்றேனும் கருதேன்; போத கிலேன், இப்படி இருப்பினும் என்னத் தொண்டருள் ஒருவனுக் வைத்து அவர்களோடு கூட்டி வைத்தாயே! உன் பேரருள் தான் என்னே!’ என்று வியப்படைகிறர். உயிருக்கு எப்படியும் மோசம் வரும் என்று அறிந்து, உன் அரும்பதங் களைச் சேவிக்கவேண்டும் என்று நான் நினைக்க வில்லையே: என்று இரங்குகிருர், இதற்குக் காரணமான என் பாவத்தைத் தீர்த்தருள வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்கிருர். இருதலைக் கொள்ளி எறும்பு போல என் உள்ளம் குலேகின்றது; இந்தத் துயரத்தை ஒழித்து அருள் பாலிக்கவேண்டும்’ என்று வேண்டுகிறர். 1 : 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/27&oldid=894385" இலிருந்து மீள்விக்கப்பட்டது