பக்கம்:திரட்டுப் பால்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திரட்டுப்பால் ஒடும் கருத்தை இருத்த வல்லார்க்கு உகம் போய்ச் சகம் போய்ப் பாடும் கவுரி பவுரி கொண்டாடப் பசுபதி நின்ருடும் பொழுது பரமாயிருக்கும் அதீதத்திலே; குருநாதன் சொன்ன கருத்தை மனத்தில் இருத்தும் கண்டிர், முத்தி கை கண்டது; மயில்வாகனனச் சாந்துணைப் போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே, இராப்பகலற்ற இடத்தே இருத்தல் எளிதல்லவே. இட்டு மிடிக்கின்றலே. முருகனே வாழ்த்துவது: கைவரும் தொண்டு; முருகன் பதத்தே கருத்தைப் புகுத்தின் வீட்டில் புகுதல் மிக எளிது; அன்பு குன்றி யோகம் செய்வதால் பயன் இல்லே. செங்கோடனே வாழ்த்துகை சால நன்றே; யான் தான் எனும் சொல் இரண்டும் கேட்டால் அன்றி யாவருக்கும் தோன்ருது அத்தியம், சலங்காணும் வேந் தர் தமக்கும் அஞ்சார், எமன் சண்டைக் கஞ்சாச், துலங்கா நரகக் குழியணுகார், துட்ட நோயனு:கார், கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானேக்கும் கந்தன் நன்னூல் அலங்காரம் நூற்றுள் ஒரு கவிதான் சற்றறிந்தவரே. ஆவிக்கு மோசம் வருமாறறிந்து முருகன் அருட்பதங்கள் செவிக்க வேண்டும்; அறுமுகவன் வேலும் திருக்கையும் உண்டே நமக்கொரு மெய்த்துணையே. துணை பல வகையான துணைகள் நமக்கு வேண்டும்.தொண்டர் குழாம் சாரின் கதியுண்டு, இரப்பவர்க்கு ஈவது தொலேயா வழிக்குத் துணை; விழிக்குத் துணை முருகன் மென்மலர்ப் பாதங்கள்; iமய்ம்மை குன்ரு மொழிக்குத் துனே முருகா எனும் நாமங்கள்; முன்பு செய்த பழிக்குத் துனே அவன் பன்னிரு தோள்கள்; பயந்த வழிக்குத் துணை வடிவேலும் மயூரமுமே. - கால பயம் இன்மை முருகனே வணங்குவதனுல் கால பயம் இராது என்பதைக் காலன முன்னிலைப் படுத்தியும் படர்க்கையில் வைத்தும் பல பாடல்களேப் பாடியுள்ளார். ‘. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/32&oldid=894391" இலிருந்து மீள்விக்கப்பட்டது