பக்கம்:திரட்டுப் பால்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:35 கந்தர் அலங்காரம் சேவடி நீட்டும் பெருமாள் மருகன்றன் சிற்றடியே. தடுங்கோள் மனத்தை; விடுங்கோள் வெகுளியைத் தானம்என்றும் இடுங்கோள், இருந்த படிஇருங் கோள்;எழு பாரும்உய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றம் திறக்கத் தொளேக்கவைவேல் விடும்கோன் அருள்வந்து தானே உமக்கு வெளிப்படுமே. வேதாகமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப் பாதார விந்தம் அரணுக, அல்லும் பகலும்இல்லாச் சூதான தற்ற வெளிக்கே ஒளித்துச்சும் மாஇருக்கப் போதாய் இனிமன மே; தெரி யாதொரு யூதர்க்குமே. வையிற் கதிர்வடி வேலோனே வாழ்த்தி, வறிஞர்க்கென்றும் நொய்யில் பிளவள வேனும் பகிர்மின்கள்; நுங்கட்கிங்கன் வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையில் பொருளும் உதவாது காண், நும் கடைவழிக்கே. (15) (16) (17) (18)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/44&oldid=894404" இலிருந்து மீள்விக்கப்பட்டது