பக்கம்:திரட்டுப் பால்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை கந்தர் அலங்காரம் விநாயகரை முதலிற் சொல்லி, மேலே நூற்றேழு பாடல்கள் சேர்ந்து, மொத்தம் நூந்றெட்டுப் பாடல்கள் கொண்டு விளங்குகிறது. நூற்றெட்டு என்பது அர்ச்சனைக்குரிய எண்; அஷ்டோத்தர சத நாம அர்ச்சனை என்று சொல்வார்கள். - . இந்தப் பாடல்களில் அருணகிரிநாதப் பெருமான் முருகப் பெருமானுடைய திருவடி முதல் திருமுடி வரையில் உள் ள கோலத்தையும், அப்பெருமான் திருவிளையாடல் களையும், வீரச்செயல்களையும் சொல்கிருர், தாம் பெற்ற அநுபவத்தைப் பல வகையில் எடுத்துரைக்கிருர், மக்களுக்கு உபதேசம் செய்கிரு.ர். உடம்பின் இழிவையும், பொருள் நிலையாமையையும், மாதர் மயலே அகற்ற வேண்டுவதையும் கூறுகிருர், பல இடங்களில் தாம் மாதர் மயலில் உழந்த தாகவும், வேறு பல குறைகளே உடையவராகவும் சொல்லிக் கொள்கிருர், அவற்றை அவருடைய குறைகளாக எண்ணக் கூடாது. பிற மக்களுடைய குற்றங்களைத் தம்மேல் ஏற்றிக் கொண்டு சொல்வது ஞானியர் இயல்பு, மாணிக்கவாசகர் முதலிய பெரியோர் திருவாக்கிலிருந்து இந்த உண்மையை உணரலாம். காரைக்காலம்மையார் அறுபத்து மூவரில் ஒருவர். அவர் ஒரு பாட்டில், நினேயா தொழி தி.நன் னெஞ்சமே நந்தமக்கோர் தஞ்சமென்று, மனேயாளே யும்மைந்தர் தம்மையும் நம்பி ஓர் ஆறுபுக்கும், நனையாச் சடைமுடி நம்பன்நந் தாதைநுந் தாதசெந்தி, அனயான் அமரர் பிரான்அண்ட வாணன் அடித்தலமே?” என்று பாடுகிறர். அவருக்கு மளையாளும் மக்களும் இருக்க நியாயம் இல்லை. அவர் பெண்மணி அல்லவா? பிறருடைய குற்றங்ககத் தம்மேல் ஏறட்டுக் கொண்டு பெரியோர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/5&oldid=894410" இலிருந்து மீள்விக்கப்பட்டது