பக்கம்:திரட்டுப் பால்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தர் அலங்காரம் 63 கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம, வேல், நிருதசங் கார பயங்கரனே. (108) செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும்செங் கோடைக் குமரன் என எங்கே நினேப்பினும் அங்கேஎன் முன்வந் தெதிர்நிற்பனே. (104) ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் அருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றி லேன்,வினே தீர்த்தருளாய், வாவித் தடவயல் சூழும் திருத்தணி மாமலவாழ் சேவற் கொடியுடை யானே, அமர சிகாமணியே. ( 105) கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலேயும் என்றன் உள்ளத் துயரை ஒழித்தரு ளாய்;ஒரு கோடிமுத்தம் தெள்ளிக் கொழிக்கும் கடற்செந்தில் மேவிய சேவகனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/71&oldid=894434" இலிருந்து மீள்விக்கப்பட்டது