பக்கம்:திரவிடத்தாய்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ணன்) என்பதற்கு எதிராகத் தமக்குப்பின் பிறந்தவனைத் தம்பி என்றனர். அது தம்பி என உலக வழக்கில் கடைக்குறையாய் வழங்குகின்றது. ஆனால், தெலுங்கிலோ தம்முடு எனத் திரிந்து வேர்ப்பொரு ளிழந்துவிட்டது.

தெலுங்குச் சொற்கள் தமிழில் திரிந்துள்ள முறைகள்

1. எழுத்துத் திரிபு

இ - எ : கோணி - கோனெ; விலை - வெல; திரை - தெர. உ - : ஊற்று - ஊட்ட; பாட்டு - பாட்ட; தட்டு - தட்ட; போக்கு - போக்க. உ - ஓ : புகை - பொக; உடல் - ஒடலு; குழி - கோயி; முனை

- மொன; குனை - கொன; முளை - மொலி; உரை - ஒர. ஐ - அ : பொம்ம, உவம, குளிக, குப்ப, பக, மந்த, ஓட்ட, நட,

மகிம, தீர்வ, கட, குத்தக, வல, மூல, கொள்ள, மாத்ர,


அமரிக்க, போலிக்க (போலுகை) தொல, அல, நடத்த, வாடுக்க, வேதன, நிலுவ, சால, சேரிக்க (சேர்க்கை),

விடுதல, ஓடம்படிக்க, நம்மிக்க, இட்டிக, தார, மூட்ட, வேடுக்க, தண்டன, வேட்ட, தெர்ரவ (தெரிவை),

முதலிய ஏராளமான தெலுங்குச் சொற்கள் தமிழில் ஐகார வீற்றன. ஐ - எ : கட்டை - கட்டெ; திண்ணை - தின்னெ. ண - ன : எண்ணிக்கை - என்னுக்க; துணிக்கை - துனக்க; காணிக்கை - கானுக்க. ந - ம : நீர் - மீரு; நாம் - மேமு. ய - ச : உயிர் - உசுரு; பயறு - பெசலு. ழ - ட : நீழல் - நீட; பாழ் - பாடு; மேழி - மேடி; ஊழியம் -ஊடிகமு; நாழி - நாடி. ற - ர : வேறு - வேரு; மீறு - மீரு. ற்ற - ட்ட : ஊற்று - ஊட்ட; புற்று - புட்ட; மாற்றம் - மாட்ட; சுற்று - சுட்டு ; பற்று - பட்டு; தேற்றம் - தேட்ட. ன்ற- ண்ட : என்று (வெயில்) - எண்ட; ஒன்றி - ஒண்டி.

சில சொற்கள் முதல் வேற்றுமையில் றகரமும் திரி

வேற்றுமையில் இரட்டித்த டகரமும் பெறும். எ-டு : நூறு - நூறு; நூற்று - நூட்ட.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/106&oldid=1430770" இலிருந்து மீள்விக்கப்பட்டது