பக்கம்:திரவிடத்தாய்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூத்திக்கி அண்டுக்கொனி உன்ன நெத்துரு சூச்சி, அதி தன பிட்டனு கரிச்சி சம்பினதி அனி தலஞ்ச்சுகொனி, ஆ முங்கினி கொட்டி சம்பெனு, தருவாத்த இண்டிக்கி போயி, தொட்லலோ சுகமுகா நித்ரபோத்தூ உன்ன பிட்டனுன்னு தொட்லவத்த முங்கி பட்டி சம்பின பாமுனுன்னு சூச்சி, சாலா துக்கப்படெனு.

இதன் மொழிபெயர்ப்பு - ஓர் ஊரிலே ஒரு பார்ப்பனன் இருந்தான் . அவனிடம் ஒரு மூங்கா (கீரி) இருந்தது. அவன் அதை மிக விழிப்பாய் வளர்த்திருந்தான். ஒரு நாள் அவனுக்கு ஓர் ஊருக்குப் போகவேண்டிய பணி (வேலை) வந்தது. ஆகையால் அம் மூங்காவைத் தன் மனைவியிடம் ஒப்புவித்துப் போயினான். மறுநாள் அவள் தன் பிள்ளையைத் தொட்டிலிலே தூங்க வைத்து, அம் மூங்காவைத் தொட்டிற் பக்கம் காவல்வைத்து நீர் (தண்ணீர்) இறைத்துக்கொண்டு வருவதற்குப் போனாள். அதற்குள், பிள்ளை தூங்கிக் கொண்டிருந்தபோது தொட்டிற் பக்கம் ஒரு பாம்பு வந்தது. அம் மூங்கா அப் பாம்பைப் பற்றி (பிடித்து)த் துண்டஞ்செய்து போட்டுவிட்டு நடந்த செய்தியைத் தாய்க்குத் தெரியப்படுத்துவதற்கு அவளிடம் போனது. அப்போது அவள் மூங்காவின் மூஞ்சியில் ஒட்டிக்கொண்டிருந்த நெய்த்தோரை (அரத்தத்தை)ப் பார்த்து, அது தன் பிள்ளையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்று நினைத்துக்கொண்டு, அம் மூங்காவை அடித்துக் கொன்றுவிட்டாள். பிறகு, இல்லத்திற்குள் போய்த் தொட்டிலிலே நலமாய்த் தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையையும், தொட்டிற் பக்கம் மூங்கா பற்றிக்கொன்ற பாம்பையும் பார்த்துச் சாலவும் வருந்தினாள். (உஞ்ச - உண்டு என்பதன் பிறவினை. உன்ன = உள்ள).

தெலுங்குத்திரிபு விளக்கம்

தமிழுக்கும் தெலுங்குக்கும் பல சொற்கள் பொதுவாயிருப் பினும், அவற்றுள் எது எதினின்று வந்ததென்று ஆராய்ச்சி யில்லாததார்க்குத் தோன்றாதிருக்கலாம். ஒரு சொல்லின் இரு மொழி வடிவங் களின் பொருளையும் வேரையும் ஆராயின், எது இயற் (Primitive) சொல் எது திரி (Derivative) சொல் என்று அறிந்துகொள்ளலாம்.

வெண்ணெய் (வெள்+நெய்) என்பது தமிழில் வெள்ளையான நெய் என்று பொருள்படுவது. இதன் திரிபான வென்ன என்னும் தெலுங்குச்சொல் இப் பொருளைத் தருவதன்று. தம்முன் (அண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/105&oldid=1430769" இலிருந்து மீள்விக்கப்பட்டது