பக்கம்:திரவிடத்தாய்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பவற்றுள் ஒன்றை யிறுதியாகக்கொண்ட பெயர்களின் 4ஆம் வேற்றுமை உருபு 'கி' எனத் திரிந்தும், பிறவீற்றைக் கொண்ட பெயர்களில் 'கு' எனத் திரியாதும், உலக வழக்கில் வழங்கு கின்றன.

எ-டு : கிளிக்கி, கடைக்கி, வீட்டுக்கு, பலாவுக்கு.

இங்ஙனமே தெலுங்கில் கத்தி என்பது பன்மையில் கத்துலு என்று திரியும். பதில் திகில் என்பன முறையே பதுலு திகுலு என்று திரியும். சிறியிலை, பொதியில், அடிசில், கோயில் என்னும் தமிழ்ச்சொற்களும் இம் முறை பற்றியனவே.

3. பொருள் திரிபு

சொல்

தமிழ்ப் பொருள்

தெலுங்குப் பொருள் செப்பு

விடை சொல்

சொல் ஈ

தாழ்ந்தவனுக்குக் கொடு

கொடு கொட்டு

மேளம் அடி

அடி உண்டு

உள்ளது

இரு குக்கல்

குள்ள நாய்

நாய்

4. இயற்கைத் தெரிப்பு (Natural Selection)

வீடு, மனை, இல், குடி, அகம், பள்ளி முதலிய பல வீட்டுப் பெயர்களில் இல் என்பதையும், மூங்கில், கழை, பணை, வேய், அமை, வெதிர், வேழம் முதலிய பல மூங்கிற் பெயர்களில் வெதிர் என்பதையும் தெலுங்கு தெரிந்துகொண்டது இயற்கைத் தெரிப்பாகும்.

5. விதப்புச் சொற்கள்

1. மறைந்த வேரின : சதுவு, அம்மு (sell) முதலியன.

2. மறையா வேரின : திகு (இறங்கு), வம்பு (வளைவு) முதலியன.

இ > திகு. வள் < வம்பு.

6. மொழிபெயர்ப்புச் சொற்கள்

புகையிலை - பொகாக்கு; நாய்க்குடை (காளான்) - குக்க கொடுகு.

7. தொடர்ச் சொற்கள்

கட்டுக்கத, கட்டுமானு, கட்டுமூட்ட, தூக்குமானு, இதிவரக்கு, தப்பிஞ்சுக்கொனிப்பரு, தெலியப்பருச்சு, வென்னெலெ (வெண்ணிலா), வெலுப்பலகா (வெளிப் படையாய்), குண்டுச் சூதி விடிகத,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/108&oldid=1430772" இலிருந்து மீள்விக்கப்பட்டது