பக்கம்:திரவிடத்தாய்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

நிட்டூர்ப்பு (நெட்டுயிர்ப்பு), சரியயின, சோமாரி, (சோம்பேறி), ஊனுகோல, திட்டிவாக்கிலி (திட்டிவாசல்), தேனெ கூடு, போக்கிரி, கட்டக்கட்டு, கொனியாடு (கொண்டாடு), நெலமாளிகா, கட்டெ நிப்பு, ஓடச்சரக்கு, ஏற்பரச்சு, பட்டங்கட்டுமு, செல்லுச்சீட்டி, இட்டகுமுந்து, ஒண்டுவிடிச்சின, யொகட்டி, மிக்கிவிகானுண்டு, கூடப்போ, நிலிப்பிப்பெட்டு, கனிப்பெட்டு (கண்டுபிடி), முந்துப்போயின, தப்புலேதனுட்ட, நெரவேர்ச்சு, மூக்குப்பொடி, முளுகோல, ஏற்பாடு, சேயு முதலிய எண்ணிறந்த தொடர்மொழிகள் தமிழ் முறையின.

8. வாக்கியங்கள்

தெலுங்கு எவ்வளவு திரிந்திருப்பினும், இன்றும் பல வாக்கியங்கள் தமிழ்ச்சொற்களாலேயே அமைவன.

தமிழ்  : அவருக்கு இருவர் பிள்ளைகள்.

தெலுங்கு  : வாரிக்கு இத்தரு பில்லகாயலு.

தமிழ்  : அப் பணி செய்கிறதற்கு உனக்குப் பத்து உருபா ஈகிறேன்.

தெலுங்கு  : ஆ பனி சேசேதானிக்கு நீக்கு பது ரூபாயிலு இஸ்தானு.

9. திரியாச் சொற்கள்

முனி, மஞ்சு, கணக்கு, ஒட்டு (oath), சேக்கு, அச்சு, மதி, தொட்டி, பொடி, சாக்கு, எதிரி, துண்டு, வித்து, பட்டி (list), தப்பு, பொட்டு, வெறி, கூலி, சக்கிமுக்கி, கொக்கி, கொண்டி, முடி, காந்தி, மட்டுப்படு, போராடு, பாசி, கொடி, மப்பு, தீர்ப்பு, வசதி, கருக்கு முதலிய எண்ணிறந்த சொற்கள் இன்றும் இரு மொழியிலும் ஒரே வடிவாய் வழங்குகின்றன.

10. குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation)

தெலுங்கில் ஆ, ஈ முதலிய நெடுஞ்சுட்டும் ஏ என்னும் நெடு வினாவும் ஏடு (ஆண்டு), சச்சி (செத்து) முதலிய சில சொற்களும் தொன்னிலையி லுள்ளன.

இங்ஙனம் ஒரு சில சொற்கள் மட்டும் தெலுங்கில் தமிழினும் இயற்கை நிலையிலுள்ளன. இந்நிலை குடியேற்றச் சொற்காப்பின் பாற்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/109&oldid=1430773" இலிருந்து மீள்விக்கப்பட்டது