பக்கம்:திரவிடத்தாய்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

4

துளு

துளு வியல்பு: குடகுக்கு மிகநெருங்கி, கன்னடத்தினின்று சிறிதும் மலையாளத்தினின்று பெரிதும் வேறுபட்டுத் திருந்திய திரவிட மொழிகளுள் ஒன்றாய், தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என்னும் நான்கிற் கடுத்தாற்போற் சொல்லத்தக்கது துளுவாகும்.

துளுவிற்குத் தனியெழுத்தும் தனி அல்லது பழைய இலக்கியமுமில்லை. மங்களூர்ப் பேசெல் (Basel) விடைத் தொண்டரால் கன்னடவெழுத்திலும், துளுவப் பார்ப்பனரால் மலையாளவெழுத்திலும் துளு எழுதப்பட்டுவருகின்றது.

துளு வழங்கெல்லை: மேல்கரை நாட்டில் கன்னடத்திற்குத் தெற்கில், சந்திரகிரி கல்யாணபுரி ஆறுகட்கிடையில், பெரும் பாலும் தாய்மொழியாகப் பேசப்படுவது துளு,

துளுவநாட்டு வரலாறு: கொடுந்தமிழ் நாடுகளைப்பற்றிய,


"சிங்களஞ் சோனகஞ் சராவகஞ் சீனந் துளுக்குடகம்" "கொங்கணத் துளுவங் குடகம் கன்னடம்" (நன். மயிலை)


என்னும் பழஞ் செய்யுள்களில் துளுவுங் கூறப்பட்டிருப்பதால், கொங்கணம் கன்னடம் குடகு முதலிய நாடுகளைப்போன்றே, துளுவநாடும் பழைமையான தென்றறியலாம். ஆயினும், துளுவ நாட்டுக் கொடுந்தமிழ் கிளைமொழியாய்ப் பிரிந்து போனது 16ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரே யென்பதை உணர்தல் வேண்டும்.

துளுவநாட்டிலிருந்து பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டைமண்டலத்திற் குடிவந்தனர். அவர் தொண்டைமண்டலம் துளுவவேளாளர். அவர் மொழி தொன்று தொட்டுத் தமிழே.

பெயர்ச்சொல்

1. மூவிடப் பெயர்


தன்மை

முன்னிலை

தற்சுட்டு ஒருமை:

யானு

தானு பன்மை:

எங்குளு,

ஈரு

தனுகுளு


நம

நிகுளு

சுட்டுப்பெயர்


ஆண்

பெண்

பலர்

ஒன்று

பல அண்மை :

இம்பெ

மோளு

மேரு (ஆ.)

இந்து,

உந்தெகுளு

மோகுளு (பெ.)

உந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/110&oldid=1430775" இலிருந்து மீள்விக்கப்பட்டது