பக்கம்:திரவிடத்தாய்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பல்லடு குள்ளுது பரண்டு பத்தியெ = பள்ளத்திற் குந்திக் குட்டி (அரை)த் தவளையைப் பிடித்தான். பறழ் - பரண்டு (?).

மல்ல புதெ மெல்ல ஜாவொடு = மல்ல (பெரிய) பொதியை மெல்ல இறக்கவேண்டும்.

தன தரெகு தன கை - தன்கையே தனக்குதவி (தமிழ்).

காலொகு தக்க கோல, தேசொகு தக்க பாஷெ, தாளொகு தக்க மேள = காலத்துக்குத் தக்க கோலம், தேசத்துக்குத் தக்க பாசை, தாளத்துக்குத் தக்க மேளம்.

ஆண்டெதபாயி கட்டொலி தூண்டெத பாயிகட்டேல்யா? = அண்டாவாயைக் கட்டலாம் தொண்டை வாயைக் கட்டலாமா?

'உலைவாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது' (தமிழ்).

காடு சொர்க்கினவுளு ஏடுனு புடொடு, ஊரு சொர்க கினவுளு கொங்கணனு புடொடு = காடுசொக்கினவுழி (தழைத்தவிடத்து) ஆட்டை விடவேண்டும். ஊர்சொக்கின வழி கொங்கணனை விட வேண்டும். சொக்குதல் : அழகாயிருத்தல், மயக்குதல்.

நலிபெரெ திரியந்தினாயகு ஜாலு வோரெகெ = நடஞ் செய்யத் தெரியாதவனுக்கு நிலஞ் சமனில்லை.

ஆடமாட்டாத தேவடியாள் கூடங் கோணல் என்றாளாம் (தமிழ்).

நாயித பீல வோண்டெடு பாடுண்ட சம ஆவா? = நாயின் வாலைக் குழாய்க்குள் விட்டாலும் சமமாகுமா?

நாயின் வாலை மட்டைவைத்துக் கட்டினாலும் நேராகுமா? (தமிழ்)

பிஜினுகு தாயெகு கர்பத பேலெ? = எறும்புக்கு எதற்கு இரும்பு வேலை? இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? (தமிழ்)

பாயிடு மக மக பஞ்சிடு பக பக = வாயில் மகன் மகன் வயிற்றில் பகை பகை.

உதட்டில் உறவும் உள்ளே பகையும் (தமிழ்).

பெரிகு பூரி பெட்டுலா கர்பொகு கொரி நீருலா பிர பருவா? = பிறக்கு (முதுகு) விழுந்த அடியும் இரும்பு கொண்ட நீரும் பிறகு (திரும்ப) வருமா?

மாதிக இல்லுடு உணசு ஆண்ட ப்ராணகு தானெ? = பறையன் இல்லில் உணவானால் பார்ப்பானுக்கு (பிராமணனுக்கு) என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/118&oldid=1430784" இலிருந்து மீள்விக்கப்பட்டது