பக்கம்:திரவிடத்தாய்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இடைச்சொல்

வியப்பு : ஆஹா, ஓ, ஓஹோ, அப்ப

இரக்கம் : அய்யோ, அய்யப்ப

வெறுப்பு : ஹே, சீ, சீச்சி

வினா : ஆ, னா, ஏ, யேனி? (என்று?)

சுட்டு : ஆ, ஆது, ஆனி (அன்று) அடெ (ஆண்டு), அவுளு (அவண்).

இடம் : கைதளு (கிட்ட), முட்ட (கிட்ட), மித்து (மேல்), உளயி (உள்), பிடயி (வெளி), சுத்த (சுற்றும்), யெதுரு, பிரவு (பிறகு).

காலம் : கடெச (கடந்து), பேக (வேகம்).

படி : மெல்ல, நிடுப (நெடுக்க), வொட்டுகு (கூட), ஒப்ப, தேற்றம் - ஏ (ஈயெ).

தொடர்ச்சொல் : அக்கக்க (அக்கக்காய்), சுத்த முத்த (சுற்று முற்றும்), ஆணுபிலி, நீருகுட்ட (dropsy), அடிமேலு முதலியன.

சொற்றொடர்

அரசு ஆளுவெ = அரசன் ஆள்கிறான். கடலு மல்லெ ஆதுண்டு = கடல் பெரிதாயிருக்கின்றது. யென குதுரெகு நினகுதுரெ மல்லெ = என் குதிரைக்கு நின் குதிரை பெரிது. ஆயெ தனனு தானெ ஹாக்கொண்டே = அவன் தன்னைத் தானே அடித்துக் கொண்டான்.

மல் = பருமை. மல்லல் - வலி. "மல்லன்மழவிடை யூர்ந்தார்க்கு" (சிலப். 17, கொளு.) மல்கு = மிகு, மல்லல் = மிகுதி (சூடா.) "மல்லல் வளனே" (தொல். சொல். 303).

பழமொழிகள்

உப்பு தீந்தினாயெ நீரு பர்வெ = உப்புத் தின்றவன் நீர் பருகுகிறான்.

கர்ம்பு சீபெ அந்துது பேரு முட்ட அக்கியட = கரும்பு தீவியதென்று வேர்முட்டத் தின்னக்கூடாது.

கரும்பு இனிக்கிறதென்று வேரோடு தின்னலாமா? (தமிழ்) தானு களுவ ஆண்ட ஊரு களுவெகெ = தான் கள்ளனானால் ஊருங் கள்வனாம்.

தான் திருடி அசலை நம்பான் (தமிழ்).

பஜெ இத்தினாது காரு நீனொடு = பாயிருக்கிற அளவு கால் நீட்டவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/117&oldid=1430783" இலிருந்து மீள்விக்கப்பட்டது