பக்கம்:திரவிடத்தாய்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பழந்தமிழர் தம் முன்னோரைத் தென்புலத்தார் என்றமையாலும், தெற்கே அமிழ்ந்துபோன குமரிநாடே தமிழர் தொல்லகம் என்பது ணரப்படும். எதிர்த் திசைகளைக் குறிக்கும் போது கிழமேல் தென்வடல் என்று கூறுவதே மரபு; மேல்கிழக்கு வடதெற்கு என்று கூறுவது மரபன்று. நாகரிக மக்கள் கீழிருந்தே மேற்செல்ல வேண்டியிருப்பதாலும், கதிரவன் கிழக்கே தோன்றி மேற்கே மறைவதாலும் கிழக்கு முற்கூறப்பட்டது. தமிழர் தெற்கேயிருந்தே வடக்கு வந்தவராதலின் தெற்கு முற்கூறப்பட்டது என்க.

5. தமிழம் என்னும் பெயரே திரவிடம் எனத் திரிந்தது

பண்டைக் காலத்தில் நாட்டுப் பெயர்களும் மொழிப் பெயர்களும் பெரும்பாலும் 'அம்' ஈறு பெற்றே வழங்கின. எ-டு: சிங்களம், கடாரம், ஆரியம். தமிழும் 'தமிழம்' என வழங்கிக் குலத்தையும் நாட்டையும் மொழியையுங் குறித்தது. தமிழக் கூத்து தமிழ வண்ணான் என்னும் புணர்மொழிகளில், தமிழ் என்னுஞ்சொல் அகரச்சாரியை பெற்றுப் புணர்ந்ததென்று கொள்வதைவிட, தமிழம் என்னுஞ் சொல்லே நிலைமொழியாக நின்று ஈறுகெட்டுப் புணர்ந்ததென்று கொள்வது சாலச் சிறந்தது. தமிழம் என்பது குலமும் நாடும் மொழியும் ஆகிய மூன்றையும் குறிக்குஞ் சொல்லாதலின், தெளிவின் பொருட்டு நாட்டைக் குறிக்கும்போது தமிழகம் என வழங்கினர்.

"வையக வரைப்பில் தமிழகங் கேட்ப" (புறம். 168:18). தமிழகம் என்னும் பெயரையே பண்டைக் கிரேக்க உரோம சரித்திராசிரியர் 'டமிரிக்க' (Damirica), 'டமெரிக்கெ' (Damarice) எனத் திரித்து வழங்கினர்.

வடநாட்டு ஆரிய (சமஸ்கிருத) நூல்களில் திரவிடம் என்னும் சொல் முதலாவது த்ரமிளம் என்றே வழங்கி வந்தது. ழகரம் வடமொழியிலில்லை. சில உயிர்மெய்ம் முதல்களை ரகரஞ் சேர்த்து, த்ர ப்ர எனப் புணரெழுத்துகளாகத் திரிப்பது வடநூலார் வழக்கம். எ-டு: படி - ப்ரதி, பவளம் - ப்ரவளம். இதனால், தமிழம் என்னுஞ் சொல் த்ரமி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/16&oldid=1430596" இலிருந்து மீள்விக்கப்பட்டது