பக்கம்:திரவிடத்தாய்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

கொடுமை வளைவு. செங்கோல் கொடுங்கோல் என்னுஞ் சொற்களை நோக்குக.

செந்தமிழ்ச் சொற்கள், இயற்சொல் (Primitives) திரிசொல் (Derivatives) என இரண்டாக வகுக்கப்பட்டன. இயல்பான சொல் இயற்சொல்; அதினின்று திரிக்கப்பட்ட சொல் திரிசொல். கிள், சேர் என்பன இயற்சொற்கள்; கிள்ளை, சேரி என்பன திரிசொற்கள். இயற்சொல் வேறு; வேர்ச்சொல் வேறு; பகுதியும் வேறு. கிள் என்பதற்குக் கில் என்பதும், சேர் என்பதற்குச் சே என்பதும் வேர்ச் சொற்களாம். வேர்ச்சொல் முந்தினது, இயற்சொல் பிந்தினது. இற்றை யியற்சொற்கள் தோன்றாத முதற்காலத்தில் வேர்ச் சொற்களே இயற்சொற்களாயும், இயற்சொற்களே திரிசொற்களா யுமிருந்தன. வேர்ச்சொற்கள் (1) ஆணிவேர்ச் சொற்கள் (primary roots), (2) பக்கவேர்ச் சொற்கள் (secondary roots), (3) சல்லி வேர்ச் சொற்கள் (tertiary roots) என மூவகைப்படும். வேர்ச் சொற்கட்கும் மூலமான விதைச் சொற்கள் என்பன உண்டு. அவையே சுட்டு விளக்கத்திற் கூறப்பட்ட ஐஞ்சுட்டுகள். பகுதி என்பது வேர்ச் சொல்லாயும் இயற்சொல்லாயும் திரிசொல்லாயும் இவற்றின் மிகைபாடாயும் பகு சொல்லின் முதனிலையாயிருப்பது. இவற்றிற் கெடுத்துக்காட்டுகளை, முறையே, கில்லினான் கிள்ளினான் கிளைத்தான் கிளைப்பட்டான் என்னும் பகுசொற்களிற் காண்க. இவற்றின் நுட்பங்கள் செந்தமிழ்ச் சொல்லியல் நெறி முறைகள் என்னும் நூலில் விளக்கப்படும். இங்ஙனமெல்லாம் சொன் மூலங்களை அடிநிலை வரைக்குமே ஆராய்ந்து செல்லத் தமிழில்தான் இயலும். ஆரிய நூல்களில் வேர்ச்சொற்களாகக் காட்டப்படுபவற்றிற் பல திரிசொற்களும் அவற்றின் திரிபுகளுமே யென்றறிக.

கொடுந்தமிழ்ச் சொற்கள் செந்தமிழ் நாட்டைச் சூழப் பல திசையிலும் வழங்கினமையின் திசைச்சொற்க ளெனப்பட்டன.

மேற்கூறிய இயற்சொல் திரிசொல் திசைச்சொல் என்னும் மூன்றுடன், இடைக்கழகக் காலத்தில் புதிதாய் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/18&oldid=1430598" இலிருந்து மீள்விக்கப்பட்டது