பக்கம்:திரவிடத்தாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மலையாளம்

கன்னடம்

தெலுங்கு

ந - ஞ

ப - ஹ

ழ - ட - தட்பவெப்பநிலை ஐ - அ

ஐ - எ

ண - ன - சோம்பல்

இனி ஊண், தொழில், பழக்கவழக்கம், அயன்மொழிக் கலப்பு முதலியவற்றாலும் எழுத்தொலி திரியும். எழுத்தொலித் திரிபு தட்பவெப்பநிலை ஊண் முதலியவற்றால் திரிவது கிளைமொழியாக்கத் (Dialectic variation)திற்குக் காரணமாம்; சோம்பலால் திரிவது ஒலிமுறைக் கேடாம் (Phonetic decay).

(3) சொல் திரிபு

(4) பொருள் திரிபு

எ-டு: வெள்ளம் (த.) = வெள்ளையான புதுப்பெருக்கு நீர்; வெள்ளம் (ம.) = நீர்.

(5) இயற்கைத் தெரிப்பு (Natural Selection) தாய்மொழியாகிய தமிழில் வீட்டைக் குறிக்கும் ஒருபொருட் பல சொற்களில், தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மன என்னுஞ் சொல்லையும் தெரிந்துகொண்டன. (6) வழக்கற்ற சொல் வழங்கல்

எ-டு: துன்னு = தை, (ம.), தெவு = தெகு(க.). நெய்த்தோர் = நெத்துரு (தெ.)

வழக்கற்ற சொல் வழங்கலாவது தமிழில் இதுபோது பேச்சுவழக்கற்று எழுத்துவழக்கில் மட்டுமுள்ள சொற்கள் பிற திரவிட மொழிகளிற் பேச்சு வழக்கில் வழங்குவது.

(7) குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation)

எ-டு: போழ் (ம.)=போழ்து. கொம்மு (தெ.) = கொம்பு. குடியேற்றப் பாதுகாப்பாவது இதுபோது தமிழில் வழங்கா விடினும் குமரிநாட்டில் வழங்கியவாகத் தெரிகின்ற சொற்களும் சொல் வடிவங்களும் பிற திரவிட மொழிகளிற் பாதுகாக்கப் பட்டிருத்தல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/28&oldid=1430608" இலிருந்து மீள்விக்கப்பட்டது