பக்கம்:திரவிடத்தாய்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வருவதால், தமிழில் - திரவிட மொழிகளெல்லாம் பண்டைக் காலத்தில் கொடுந்தமிழ்களா யிருந்தே பின்பு ஒவ்வொரு காலத்தில் வெவ்வேறாய்ப் பிரிந்துபோயின என்று அறிந்துகொள்க. "தென்பாண்டி.....நாட்டெண்" என்னும் பிற்கால வெண்பாவில் கன்னடமுந் தெலுங்குங் குறிக்கப்படவில்லையே என்று ஐயுறுவார், குட்டமும் குடமும் வேணுமாகிய மலையாள நாடுகளைக் கொடுந்தமிழ் நாடாக அதிற் குறித்ததினின்றாவது. பிறவும் இங்ஙனமே அதற்குமுன் ஒவ்வொரு காலத்திற் பிரிந்துபோயிருக்க வேண்டுமென்று தெளிந்துகொள்க. இன்றும், 'பச்சமலயாளம்', 'ஹளகன்னடம்', 'அச்சதெலுங்கு' என்னும் பழந்திரவிட மொழிநிலைகளை நோக்கின், அவற்றுக்கும் தமிழுக்குமுள்ள நெருங்கிய தொடர்பு புலனாம்.

இந்நிலையில்கூட, தம்பிராட்டி', 'கைநீட்டக்காசு' முதலிய மலையாளச் சொற்களும்; 'கொண்டாடு', 'திக்கில்லாத' முதலிய கன்னடச் சொற்களும்; 'ஓடச்சரக்கு', 'மூக்குப் பொடி' முதலிய தெலுங்குச் சொற்களும் எத்துணைத் தமிழ்மணங் கமழ்வன!

7. தமிழினின்று பிற திரவிட மொழிகள் வேறுபடக் காரணங்கள் (1) தமிழ் அல்லது திரவிட மக்கட் பெருக்கம் ஒரு மொழியார் மிகப் பலராகப் பெருகிவிடின், அவர் நெடுந்தொலை சென்று பரவ நேரும். அப்போது தட்ப வெப்பநிலை வேறுபாட்டாலும் சுற்றுச் சார்பினாலும் பழஞ்சொல் மாற்றினாலும் தனி விருப்பத்தாலும் சொற்கள் திரியவும் புதிதாகத் தோன்றவும் பெறும். பொதுவாக, சுமார் 500 கல் தொலைவாயின் புதுச் சொற்கள் தோன்றுவதும் மொழி திரிவதும் இயல்பு.

(2) எழுத்தொலித் திரிபு

இது தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் சோம்பலாலும் நிகழ்வது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/27&oldid=1430607" இலிருந்து மீள்விக்கப்பட்டது